Photo Credit: Honor
Honor 300 சீரிஸ் விரைவில் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹானர் 300 மற்றும் ஹானர் 300 ப்ரோவின் பல முக்கிய அம்சங்கள் வெளியானது. ஹானர் 300 அறிமுகத்திற்கு முன்னதாக, வண்ண விருப்பங்கள் மற்றும் முழுமையான வடிவமைப்பு விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஹானர் 300 வடிவமைப்பு வியாழக்கிழமை வெய்போ பதிவில் வெளியானது. ஹானர் செல்போன்கள் ஊதா, நீலம் மற்றும் வெள்ளை நிற பின்புற பேனலில் பளிங்கு போன்ற வடிவத்துடன் காணப்படுகின்றன.
Honor 300 பின்புற பேனலின் மேல் இடது மூலையில் உள்ள சமச்சீரற்ற அறுகோண வடிவ டிசைன் காணப்படுகிறது. மாத்திரை வடிவ LED பேனலுடன் இரட்டை கேமரா யூனிட் கொண்டுள்ளது. கேமரா தொகுதியின் ஒரு பக்கத்தில் "போர்ட்ரெய்ட் மாஸ்டர்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது . பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் ஆகியவை செல்போனின் வலது விளிம்பில் காணப்படுகின்றன. Honor 300 செல்போன் 6.97 மிமீ தடிமனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிப்ஸ்டர் டிஜிட்டல் வெளியிட்ட வெய்போ அறிக்கையின் படி ஹானர் 300 ஆனது 50-மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் மிடில் பிரேம், பிளாட் டிஸ்ப்ளே மற்றும் இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் வழங்கும் என்று கூறப்படுகிறது.
பேஸிக் மாடல் Honor 300 ஆனது 8ஜிபி ரேம்+256ஜிபி மெமரி, 12ஜிபி ரேம்+256ஜிபி மெமரி, 12ஜிபி ரேம்+512ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் +512ஜிபிமெமரி ஆகிய மாடல்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் 300 செல்போன்கள் Snapdragon 8 Gen 3 சிப்செட்கள், 1.5K OLED திரைகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் பெறலாம் என்று முந்தைய பதிவுகள் கூறுகின்றன . Honor 300 ப்ரோ மாடல் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் ஷூட்டர் கேமராவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹானர் 200 உடன் 2024 ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் 200 ப்ரோவின் மேம்படுத்தப்பட்ட மாடலாக Honor 300 இருக்கும். ஹானர் 200 ப்ரோவில் 50எம்பி டெலிஃபோட்டோ சென்சார்க்கு பதிலாக ப்ரோ வேரியண்ட் 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டிருக்கும். ஹானர் 300 ப்ரோ அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனருடன் வரக்கூடும். இருப்பினும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதன் முந்தைய மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. Honor 300 Pro ஆனது ஓஷன் சியான் வண்ண விருப்பத்துடன் மார்பிள் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது.
ஹானர் 300 ப்ரோ சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவிற்கு வரும். உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Honor 300 Pro ஆனது, முந்தைய மாடலின் விலையைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 60 ஆயிரம் ரூபாய் விலையில் இருந்து பேஸிக் மாடல் ஆரம்பம் ஆகும் என தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்