Photo Credit: HMD
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது HMD நிறுவனம் பற்றி தான்.
குழந்தைகளுக்கான சாதனம் தயாரிக்கும் நார்வே நிறுவனமான Xplora உடன் HMD நிறுவனம் இணைகிறது. குழந்தைகள் மற்றும் டீனேஜர்களை மையமாக வைத்து செல்போன் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் HMD நிறுவனம் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பின் விளைவாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது இளைஞர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் சாதனத்தின் தேவை பெற்றோர்களிடையே இருக்கிறது. அதனை மையமாக வைத்து HMD செல்போன் தயாரிக்க உள்ளது. அதன் வெளியீட்டு தேதி அல்லது வேறு எந்த விவரங்களையும் HMD நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
HMD, Finnish OEM, அக்டோபர் 29 அன்று ஒரு செய்திக்குறிப்பில், குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை இலக்காகக் கொண்ட ஒரு புதிய செல்போனை உருவாக்க Xplora உடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தது. பயனர்களுக்கு "பொறுப்பான சாதனங்களை" உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக இரு நிறுவனங்களும் அறிவித்தன.
2024ம் ஆண்டின் தொடக்கத்தில் HMD தி பெட்டர் ஃபோன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 10,000 பெற்றோர்களிடம் உலகளாவிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுக்கப்பட்ட பெற்றோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை வழங்கியதற்கு வருத்தம் தெரிவித்தனர். செலப்ஒன் குடும்ப நேரம், தூக்க சுழற்சி, உடற்பயிற்சி நடைமுறைகள் மற்றும் குழந்தைகளிடையே சமூகமயமாக்கும் வாய்ப்புகளை பாதித்துள்ளது என கூறினர். இது போன்ற சிக்கல்கள் இல்லாத செல்போனை உருவாக்கும் பணியில் இருப்பதாக
ஏற்கனவே HMD நிறுவனம் அறிமுகப்படுத்திய HMD ஸ்கைலைன் மற்றும் HMD ஃப்யூஷன் கைபேசிகளில் டிடாக்ஸ் பயன்முறை உள்ளது. இது பயனர்கள் தங்கள் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. HMD மற்றும் Xplora இணைந்து அதனைவிட மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் செல்போன் தயாரிக்க உள்ளன. இது 2025 மார்ச்சில் நடக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஏற்கனவே வெளியான தகவல்படி, HMD அடுத்த HMD சேஜ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகக் கூறியது. இது சமீபத்தில் HMD ஸ்கைலைன் அல்லது HMD க்ரெஸ்ட் செல்போன்களை போன்ற வடிவமைப்புடன் ஆன்லைனில் வெளிவந்தது. இது Unisoc T760 5G மூலம் இயங்கும், 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதில் இதுவரை எந்த பெரிய நிறுவனங்களும் மேற்கொள்ளாத ஒரு முயற்சியை HMD நிறுவனம் மேற்கொள்வதன் மூலம் அதன் சமூக அக்கறை வெளிப்படுகிறது என பயனாளர்கள் கூறுகின்றனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்