Google-ன் சமீபத்திய Pixel Drop அப்டேட் நவம்பர் 2025-ல் வெளியிடப்பட்டுள்ளது
Photo Credit: Google
நவம்பர் 2025க்கான பிக்சல் டிராப் கடந்த வாரம் கசிந்தது
உங்க Pixel போன் ஒவ்வொரு சில மாசத்துக்கும் அப்டேட் ஆகி, இன்னும் ஸ்மார்ட்டாக மாறுதுன்னு தெரியும். அந்த வகையில, Google அவங்களுடைய லேட்டஸ்ட் Pixel Drop அப்டேட் நவம்பர் 2025-ஐ இப்போ ரிலீஸ் பண்ணிருக்காங்க. இந்த அப்டேட்ல நிறைய AI Features வந்திருக்கு.அதுமட்டுமில்லாம, பிரபல திரைப்படமான 'Wicked: For Good' Theme Packs கூட வந்திருக்கு. இதன் மூலமா உங்க Pixel போனோட வால்பேப்பர், ஐகான்கள், சிஸ்டம் சவுண்ட்ஸ் எல்லாம் அந்த தீமுக்கு ஏத்த மாதிரி மாறும்.
மொத்தத்துல, Google-ன் இந்த Pixel Drop அப்டேட், AI மற்றும் செக்யூரிட்டில நிறைய புதிய அம்சங்களைக் கொண்டு வந்திருக்கு.
இதுதான் இந்த அப்டேட்டோட ஹைலைட். இப்போ Google Messages ஆப்-க்குள்ளேயே நீங்க எந்த போட்டோவையும் Remix பண்ணலாம், எடிட் பண்ணலாம். இது Google-ன் Nano Banana AI இமேஜ் ஜெனரேஷன் மாடல் மூலம் இயங்குது. ஒரு செல்ஃபியை 3D அனிமேஷன் ஸ்டைலுக்கு மாத்துறது, அல்லது பெட் போட்டோவை எடிட் பண்றதுனு செம கிரியேட்டிவா யூஸ் பண்ணலாம். நீங்க Remix பண்ண போட்டோவை மற்ற போன் யூஸர்களும் பார்க்க முடியும்.
நீளமான குரூப் சேட்ஸ் அல்லது மெசேஜ்களைப் படிச்சு நேரத்தை வீணடிக்க வேண்டாம். இனி உங்க Pixel போன், நோட்டிஃபிகேஷன் ஷேட்லயே அந்த மெசேஜ்களுக்கான சுருக்கமான Summary-ஐ AI மூலம் கொடுக்கும். இதனால் என்ன முக்கியம்னு ஒரு பார்வையிலேயே தெரிஞ்சுக்கலாம். இந்த வசதி இப்போதைக்கு Pixel 9 மற்றும் அதைவிட புதிய மாடல்களுக்கு மட்டுமே, ஆங்கில மொழியில் கிடைக்குது.
இது ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சம். Scam Detection இப்போ இந்தியா, UK, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது போன் கால்ஸ் மட்டுமில்லாம, Chat Messages (WhatsApp, Telegram போன்ற ஆப்ஸில்) வர்ற சந்தேகத்துக்குரிய மெசேஜ்களைக் கண்டுபிடிச்சு, 'Likely Scam'னு அலர்ட் காட்டும். இது உங்களை மோசடியில இருந்து காப்பாற்றும்.
நீங்க டிரைவ் பண்ணும்போது Google Maps யூஸ் பண்ணினா, பேட்டரி ரொம்ப கம்மியாகும். இனி Power Saving Mode ஆன் பண்ணினா, டிஸ்பிளேயில் முக்கியமான திசைகளை மட்டும் காட்டி, பேட்டரி பயன்பாட்டை சுமார் 4 மணிநேரம் வரை அதிகப்படுத்தலாம். இது Pixel 10 சீரிஸ்-ல் கிடைக்கிறது.
உங்க முக்கியமான காண்டாக்ட்ஸ்க்கு (VIPs) இனி Prioritized Notifications கிடைக்கும். அவங்க கிட்ட இருந்து வர மெசேஜை மிஸ் பண்ண மாட்டீங்க. மேலும், ஏதேனும் அவசர நிலை (வெள்ளம் போன்ற) ஏற்பட்டால், Contacts widget-ல Crisis Badge மூலமா உங்களுக்கு உடனே அலர்ட் கிடைக்கும்.
Google Photos ஆப்-ல Help Me Edit வசதி மூலமா, க்ரூப் போட்டோஸ்ல யாராவது கண்ணை மூடி இருந்தா, இல்லன்னா சன்கிளாஸ் போட்டு இருந்தா, அதை நீக்கி, கண்ணைத் திறக்க வைக்கலாம். இது உங்க கேலரியில இருக்கிற மற்ற போட்டோக்களை யூஸ் பண்ணி இயற்கையான எடிட்களை செய்யும். இப்போதைக்கு US-ல் மட்டும் கிடைக்குது.
அதுமட்டுமில்லாம, பிரபல திரைப்படமான 'Wicked: For Good' Theme Packs கூட வந்திருக்கு. இதன் மூலமா உங்க Pixel போனோட வால்பேப்பர், ஐகான்கள், சிஸ்டம் சவுண்ட்ஸ் எல்லாம் அந்த தீமுக்கு ஏத்த மாதிரி மாறும்.
மொத்தத்துல, Google-ன் இந்த Pixel Drop அப்டேட், AI மற்றும் செக்யூரிட்டில நிறைய புதிய அம்சங்களைக் கொண்டு வந்திருக்கு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama