கூகுள் பிக்சல் 3, மோட்டோரோலா ஒன் பவர், ஹானர் 9N, போக்கோ F1 மற்றும் நோக்கியா 6.1 ஆகியவை ஃப்ளிப்கார்ட் மாத இறுதி 'மொபைல் ஃபெஸ்ட்' விற்பனையில் தள்ளுபடியைப் பெற்றுள்ளன. இன்று தொடங்கிய இந்த விற்பனை ஜூலை 31 புதன்கிழமை வரை நீடிக்கும். இந்த விற்பனை ஹானர் 10 லைட், ஹானர் 7s, ஹானர் 9i மற்றும் ஹானர் 9 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களையும் தள்ளுபடி விலையில் தருகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 9, ஒப்போ ரெனோ 10X ஜூம் மற்றும் ஹானர் 20 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்கவுள்ளது இந்த விற்பனை. இதேபோல், இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில் ஆசுஸ் 6Z, பிளாக் ஷார்க் 2, மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள், கட்டணமில்ல இ.எம்.ஐ-யில் கிடைக்கப்பெறவுள்ளது.
ஃப்ளிப்கார்ட் மாத இறுதி 'மொபைல் ஃபெஸ்ட்' விற்பனையில் பெரிய தள்ளுபடியாக கூகுள் பிக்சல் 3 ரூ.49.999 என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ரூ. 71,000 என்ற விலையில் அறிமுகமானது. இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில் 15.999 ரூபாயிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா ஒன் பவர் 10,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. கூடுதலாக, கட்டணமில்லாத இ.எம்.ஐ சலுகையையும் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனை மாதம் 1,833 ரூபாய் முதல் அளித்து பெற்றுக்கொள்ளலாம்.
ஃப்ளிப்கார்ட் இந்த விற்பனையில் ஹானர் 9N 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனை "மிகக் குறைந்த விலையை" வழங்குவதாக கூறியுள்ளது. 9,999 ரூபாய் என்ற விலையில் இருந்த இந்த ஸ்மார்ட்போன், 8,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.
20,999 ரூபாயிலிருந்த போகோ F1 ஸ்மார்ட்போன் 18,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. அதுமட்டுமின்றி கட்டணமில்லாத இ.எம்.ஐ சலுகையையும் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனை மாதம் 3,000 ரூபாய் முதல் அளித்து பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில் நோக்கியா 6.1 4GB RAM + 64GB சேமிப்பு வகை 7,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல 3GB ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 12.999 ரூபாய்.
பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கையில் இந்த 'மொபைல் ஃபெஸ்ட்' விற்பனையில் வாடிக்கையாளர்கள், ஐபோன் 8 பிளஸை 51.999 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். சாதாரனமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை 66,000 ரூபாயில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாதம் 1,445 ரூபாயிலிருந்து கட்டணமில்லாத இ.எம்.ஐ சலுகையிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி, ஹானர் 7s, ஹானர் 9i மற்றும் ஹானர் 9 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் சலுகையை பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்