பிளிப்கார்ட்டின் மன்த்-எண்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையில் பிரபல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகளுடன் பல சலுகைகள்
பிளிப்கார்ட் நிறுவனம் இந்த மாதத்திற்கான மன்த்-எண்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையை அறிவித்துள்ளது . இந்த வால்மார்ட் நிறுவனம், இந்த விற்பனையில் பிரபல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகளுடன் பல சலுகைகளை தரவுள்ளது. தற்போது துவங்கிய இந்த பிளிப்கார்ட்டின் மன்த்-எண்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனை, ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணிவரை நடைபெறவுள்ளது. ஒருவேளை, பிளிப்கார்ட்டின் முந்தைய மொபைல் விற்பனையை தவறவிட்டிருந்தால், சலுகை விலையில் ஸ்மார்ட்போன்களை பெற இதுவே சரியான நேரம். இந்த விற்பனையில் பல ஸ்மார்ட்போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் மொபைல் பாதுகாப்பு ஆகியவற்றை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கவுள்ளது.
ஆன்லைனில் பணம் செலுத்தி Vivo Z1 Pro ஸ்மார்ட்போனை பெற்றால், 1,000 ரூபாய் தள்ளுபடியை வழங்கவுள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். பிளிப்கார்ட்டின் மன்த்-எண்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையில், சியோமியின் Redmi 6 ஸ்மார்ட்போன் (3GB, 64GB) 6,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. மேலும் Honor 8C ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் 7,999 ரூபாய்க்கு பிளிப்கார்ட்டில் விற்பனையில் உள்ளது.
பிளிப்கார்ட்டின் மன்த்-எண்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையில் Realme 2 Pro ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற துவக்க விலையில் விற்பனையாகிறது. Redmi Note 7 Pro ஸ்மார்ட்போனை எக்ஸ்செஞ்ச் முறையில் பெற்றால் கூடுதலாக 1,000 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது பிளிப்கார்ட் நிறுவனம். மேலும், Samsung Galaxy A50 ஸ்மார்ட்போனிற்கு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியிலிருந்து கூடுதலாக 2,000 ரூபாய் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் நடைபெறும் பிளிப்கார்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையில் Oppo A5 (4GB, 64GB) ஸ்மார்ட்போன், 9,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ளது. அதே நேரம், Redmi Y2 ஸ்மார்ட்போன் என்று இல்லாத அளவு குறைந்த விலையில் 7,499 ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அறிமுகமான மோட்டோரோலா ஒன்விஷன் ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் முறையில் பெறுகையில், எக்ஸ்சேஞ்ச் விலையிலிருந்து கூடுதலாக 2,000 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.
Asus 5Z (8GB, 256GB) ஸ்மார்ட்போன் என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில் 23,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. Asus Max M2 ஸ்மார்ட்போனும் சலுகை விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 7,499 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ளது.
ஹானர் போன்களில், Honor 10 Lite ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும், Honor Play ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகிறது.
பிரீமியம் ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை, Samsung Galaxy S10 தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு 5,000 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்கவுள்ளது. மேலும் அந்த வரிசையில் Google Pixel 3a ஸ்மார்ட்போனிற்கு 3,000 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை பெறலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்