இன்று ஆரம்பிக்கும் இந்த தள்ளுபடி விற்பனை வரும் 21 ஆம் தேதி வரை நடக்கும்.
Photo Credit: Flipkart
வால்மார்ட் நிறுவனத்தின் ஃப்ளிப்கார்ட் தளம், ஆக்ஸிஸ் வங்கியுடன் இந்த சேலுக்காக இணைந்துள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும்போது இந்த அதிரடி விற்பனையில், 10 சதவிகித உடனடி கேஷ்பேக்-ஐப் பெறலாம்.
ஃப்ளிப்கார்ட் ‘மொபைல்ஸ் பொனான்ஸா' சிறப்பு தள்ளுபடி விற்பனை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த முறையும் பல முன்னணி போன்களுக்கு ஆஃப்ர்களை வழங்கியுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இன்று ஆரம்பிக்கும் இந்த தள்ளுபடி விற்பனை வரும் 21 ஆம் தேதி வரை நடக்கும். வால்மார்ட் நிறுவனத்தின் ஃப்ளிப்கார்ட் தளம், ஆக்ஸிஸ் வங்கியுடன் இந்த சேலுக்காக இணைந்துள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும்போது இந்த அதிரடி விற்பனையில், 10 சதவிகித உடனடி கேஷ்பேக்-ஐப் பெறலாம்.
இந்த விற்பனையின் மூலம் சில போன்களுக்கு ‘எப்போதும் இல்லாத அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக' ஃப்ளிப்கார்ட் கூறுகிறது. அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 (4ஜிபி, 64 ஜிபி) 8,499 ரூபாய்க்கு (எம்.ஆர்.பி- 12,999 ரூபாய்) கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹானர் 9N போன், ரூ.8999-க்கு (எம்.ஆர்.பி- 15,999) கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும் நோக்கியா 6.1 (3ஜிபி, 32 ஜிபி) விலை குறைக்கப்பட்டு ரூ.6,999-க்கும் (எம்.ஆர்.பி- ரூ.17,979), ஹானர் 9i (4ஜிபி, 64ஜிபி) ரூ.8,999-க்கும் (எம்.ஆர்.பி- ரூ.19,999) கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ போன், அறிமுக ஆஃபரில் 1000 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
ஹானர் 10 லைட் ரூ.9,999-க்கு கிடைக்கும் (அதன் எம்.ஆர்.பி- ரூ.13,999). சாம்சங் கேலக்ஸி A50 போனை, எக்ஸ்சேஞ்ச ஆஃபரில் வாங்கினால் கூடுதல் சலுகையாக ரூ.1,500 கொடுக்கப்படும். ஆப்பிள் ஐபோன் X (64ஜிபி), ரூ.66,499-க்கு கிடைக்கும் (அதன் எம்.ஆர்.பி- ரூ.91,900).
இதைத் தவிர, விவோ V15 ப்ரோ அல்லது விவோ V15 ஆகிய போன்களை எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்கினால் 3000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். ஓப்போ F11 ப்ரோ போனுக்கும் 2,200 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃப்ர் கொடுக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி A70 மற்றும் கேலக்ஸி A20 ஆகிய போன்களுக்கும் 1,500 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃப்ர் கொடுக்கப்படும். எல்.ஜி V30+ (4ஜிபி, 128ஜிபி) போன் ‘எப்போதும் இல்லாத குறைந்த விலையில்' ரூ.27,999-க்கு கிடைக்கும் (அதன் எம்.ஆர்.பி- ரூ.60,000).
ஹானர் 7s, ரூ.5,499-க்கு கிடைக்கும் (அதன் எம்.ஆர்.பி- ரூ.8,999). ரியல்மி 3 மற்றும் ரியல்மி 3 ப்ரோ ஆகிய போன்கள், சலுகை ‘மொபைல் பாதுகாப்புத் திட்டம்' மூலம் கிடைக்கும். இதைத் தவிர, பல போன்களை சலுகை விலையில் ‘முழு மொபைல் பாதுகாப்பு' திட்டத்தின் கீழ் ஃப்ளிப்கார்ட் இந்த ‘மொபைல் பொனான்ஸா' விற்பனை மூலம் கொடுக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Amazon Black Friday Sale 2025: Best Deals on Samsung Galaxy Z Fold 7, Galaxy A55, Galaxy M17 5G, and More Phones