'Diwali with Mi' Sale! ஆஃபர் அள்ளுது....

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 14 அக்டோபர் 2019 09:49 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோமி விற்பனையில் Redmi K2 ரூ. 19,999-க்கு கிடைக்கும்
  • 43-inch, Mi TV 4A Pro-விற்கு 2,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்
  • ஸ்மார்ட்போன் பாகங்கள் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன

Xiaomi-யின் 'Diwali With Mi' sale அக்டோபர் 17 வரை நடக்கும்

ஜியோமி தனது 'Diwali with Mi' விற்பனையை கடந்த வாரம் தனது முதல் சுற்றை முடித்த சில நாட்களில் இந்தியாவிற்கு மீண்டும் வந்துள்ளது. ஆறு நாள் விற்பனையான இது அக்டோபர் 17 (வியாழக்கிழமை) வரை நடைபெறும்.

போன் ஆஃபர்கள் 

Mi.com-ன் விற்பனை பக்கத்தின்படி, 'Diwali with Mi' விற்பனையில் Redmi Note 7 Pro-வின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோஜின் விலை 13,999 ரூபாயிலிருந்து தள்ளுபடி விலையில் ரூ. 11,999-க்கு விற்பனை செய்யவுள்ளது.  

மறுபுறம் Redmi Y3, ஜியோமி விற்பனையின் போது 7,999 ரூபாய்க்கு ஆரம்பமாகும். handset-ன் ஆரம்ப விலை ரூ. 9,999-யாக உள்ளது. Redmi Note 7S-ன் 4GB RAM + 64GB ஸ்டோரஜின் விலை ரூ. 9,999-திலிருந்து தள்ளுபடி விலையாக 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பிரபலமான இடைப்பட்ட மாடல்களில் தள்ளுபடிகள் உள்ளன. Mi sale-ல் Poco F1-ன் ஆரம்ப விலை ரூ. 15,999-யாக உள்ளது. அதேபோன்று Redmi K20 Pro-வின் விலை ரூ. 27,999-திலிருந்து தள்ளுபடி விலையாக 24,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. Redmi K20-வின் விலை ரூ. 21,999-திலிருந்து தள்ளுபடி விலையாக 19,999 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஜியோமி, ப்ரீபெய்ட் ஆர்டர்களில் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.


டீவி ஆஃபர்கள்

புதிய தொலைபேசியை வாங்கவில்லை என்றாலும் இந்த பண்டிகை காலங்களில் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால், 'Diwali with Mi' விற்பனையில் பல்வேறு  Mi TV மாடல்களில் தள்ளுபடிகள் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களில் Mi TV 4A Pro 43-inch-ன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விலை ரூ. 22,999 ஆனால் தற்போது ரூ. 20.999-க்கு கிடைக்கிறது.  Mi TV 4C Pro 32-inch-ன் விலையும் ரூ. 13,999-திலிருந்து தள்ளுபடி விலையாக ரூ. 11,499-க்கு கிடைக்கிறது.

Advertisement


மற்ற ஆஃபர்கள்

சமீபத்திய விற்பனையான Mi Home Security Camera 360-யின் விலை தற்போது ரூ. 2.499-க்கு கிடைக்கிறது. இது ரூ. 2,699-க்கு அறிமுகமானது.  Mi Air Purifier 2S-ன் விலை ரூ. 8,999-திலிருந்து தள்ளுபடி விலையாக ரூ. 7,999-யில் உள்ளது. மேலும், பல ஸ்மார்ட்போன் பாகங்கள், சார்ஜர்கள் மற்றும் டேட்டா கேபிள்களில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உள்ளன.

எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 'Diwali with Mi' விற்பனையின் கீழ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். பஜாஜ் பின்சர்வ் மூலம் no-cost EMI விருப்பங்களும் உள்ளன. கூடுதலாக, Mi Protect-ன் ஆரம்ப விலை ரூ. 399, Mi Extended Warranty-ன் ஆரம்ப விலை ரூ. 399 மற்றும் Mi Screen Protect-ன் ஆரம்ப விலை ரூ. 299 என நிறுவனம் வழங்குகிறது. 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  2. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  3. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  4. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  5. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  6. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  7. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  8. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  9. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  10. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.