ஆப்பிள் இந்த மாத இறுதியில் iPhone SE 2 aka iPhone 9-ஐ அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நடப்பு காலாண்டில் அதன் வருவாய் அதன் கணிப்புகளுக்குக் கீழே இருக்கும் என்று ஆப்பிள் பிப்ரவரியில் கூறியது
கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதித்ததால் குபெர்டினோவை (Cupertino) தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், மார்ச் 31 வெளியீட்டு நிகழ்வை ரத்து செய்துள்ளதாக கிஸ்மோசீனா (GizmoChina) புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்பிள், புதிய தலைமுறை ஐபாட் புரோ உள்ளிட்ட சில சாதனங்களுடன். iPhone SE 2 aka iPhone 9-ஐ இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சாண்டா கிளாரா கவுண்டி (Santa Clara County) மக்கள் கூட்டத்தை தற்காலிகமாக தடை செய்துள்ளதால், ஐபோன் தயாரிப்பாளரிடமிருந்து நிகழ்வை ரத்து செய்வதற்கான முடிவு வந்துள்ளது.
கூடுதலாக, கொரோனா வைரஸ் காரணமாக Apple அதன் பொறியியலாளர்களுக்கு, ஆசியாவிற்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள் அதன் அடுத்த தலைமுறை iPhone 12-ன் வளர்ச்சியை பாதித்துள்ளது, இதனால் வெளியீடு தாமதமாக தொடங்கப்படலாம்.
குபேர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம், அதன் பொறியியலாளர்கள் ஆசியாவிற்கு வணிகப் பயணங்களை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை ஏப்ரல் இறுதி வரை ஒரு மாதம் நீட்டித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் சீனாவில் உற்பத்தி வசதிகளில் 5ஜி ஐபோன்களுக்கான பொறியியல் சரிபார்ப்பு சோதனைகளை (EVTs) தாமதப்படுத்தியுள்ளன.
நடப்பு காலாண்டில் அதன் வருவாய் அதன் கணிப்புகளுக்குக் குறைவாக இருக்கும் என்றும் COVID-19 தொற்றுநோயின் விளைவுகள் காரணமாக உலகளாவிய ஐபோன் விநியோகம் "தற்காலிகமாக தடைசெய்யப்படும்" என்றும் ஆப்பிள் பிப்ரவரியில் கூறியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket