6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' 39,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது.
இன்று விற்பனைக்கு வரவுள்ள 'ப்ளாக் ஷார்க் 2'
ப்ளாக் ஷார்க் 2, சியோமி நிறுவனத்தின் ஒரு கேமிங் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமாகியது. தற்போது இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை, ஜூன் 4-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. 39,999 ரூபாயை துவக்க விலையாக கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர், லிக்விட் கூல் (Liquid Cool) தொழில்நுட்பம் போன்றவற்றை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன், கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகமாகி, அங்கு விற்பனையானது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. அதில் ஒரு வகையான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' 39,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது. இதன் மற்ற வகைகளான 12GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' விலை 49,999 ரூபாய்.
இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Shadow Black) மற்றும் சிலவர் (Frozen Silver) ஆகிய இரு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்த சியோமி 'ப்ளாக் ஷார்க் 2'-வின் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 4-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது.
இரண்டு நானோ-சிம் வசதிகளை கொண்ட இந்த 'ப்ளாக் ஷார்க் 2' 6.39-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் மற்றும் 403ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூல் (Liquid Cool) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால், மற்ற ஸ்மார்ட்போன்களை விட, இதில் வெப்பத்தை வெளிக்கடத்தும் திறன் 20 மடங்கு வரை அதிகமாக இருக்கும்.
கேமரா பற்றி பேசுகையில், இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த 'ப்ளாக் ஷார்க் 2'. 48 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த கேமராக்கள். அதில் 12 மெகாப்க்சல் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் வசதி கொண்டுள்ளது. மேலும், 20 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமராவை கொண்டுள்ளது.
4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் டை-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Mark OTT Release Date: When and Where to Watch Sudeep Sanjeev’s Action Thriller Online?
Sarvam Maya OTT Release: Know Everything About This Malayalam Fantasy Drama Film