ரொட்டேடிங் கேமராவுடன் வெளியாகியுள்ள ஆசுஸ் ஜென்போன் 6: விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

விளம்பரம்
Edited by Murali S, மேம்படுத்தப்பட்டது: 17 மே 2019 14:16 IST
ஹைலைட்ஸ்
  • ரொட்டேடிங் கேமராவை கொண்ட முதல் ஆசுஸ் ஸ்மார்ட்போன்
  • 48 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என்ற அளவிலான இரண்டு கேமராக்கள்
  • ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது

நேற்று வெளியான ஆசுஸ் ஜென்போன் 6

அதிகாரப்பூர்வமாகவே வெளியானது ஆசுஸ் ஜென்போன் 6. ஆண்டுக்கு ஒருமுறை ஜென்போன் தொடரில் ஒரு போனை வெளியிட்டு வரும் ஆசுஸ் நிறுவனம், அந்த வகையில் இந்த ஆண்டு அசுஸ் ஜென்போன் 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை மே 16 தேதி அன்று ஸ்பெயினில் அறிமுகப்படுத்தியது ஜென்போன் நிறுவனம். ஆசுஸ் ஜென்போன் 5Z-ற்கு அடுத்த மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ள இந்த ஜென்போன் 6-ல்  ரொட்டேடிங் கேமராவை பொருத்தியுள்ளது ஆசிஸ் நிறுவனம். இதன் மூலம், அந்த நிறுவனத்தின் ரொட்டேடிங் கேமராவை கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும். முன்பகுதியில் உள்ள மொத்த இடத்தையும் திரைக்காக ஒதுக்கவே,இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். இரண்டு கேமராக்களை கொண்டுள்ள இந்த போனில், செல்பிக்களை எடுக்க பின்புறமுள்ள கேமராவை முன்புறமாக திருப்பினால் போதும்.

முன்னதாக கடந்த மாதம், சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனான A80-யில் இம்மாதிரியான ரொட்டேடிங் கேமராவை அறிமுகப்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து இந்த நிறுவனமும், தனது புதிய ஸ்மார்ட்போனில் ரொட்டேடிங் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், சாம்சங் ஸ்மார்ட்போன் போன்றில்லாமல், இந்த ஜென்போன் 6-ல் கேமராவை திருப்பும் முறை மிகவும் எளிதாகவே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், பின்புறம் உள்ள கேமராவை, மேற்புறமாக உயர்த்தி முன்புறம் திருப்பிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அந்த ஸ்மார்ட்போனின் கேமராவை திருப்பும்பொழுது, ரொட்டேசன் அளவை உபயோக்கிபாளர்களே நிர்ணயிக்கும் வண்ணம் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கேமராவை எந்த ஆங்கிளில் நிறுத்தியும் படங்கள் எடுத்துக்கொள்ளலாம். சுவரசியமான ஆங்கிள்களில், புதிது புதிதாக படங்கள் எடுக்க இந்த வசதி வழிவகுக்கும். மேலும், கேமராவிற்கு பாதுகாப்பு வசதியாக, ஒருவேளை, ஸ்மார்ட்போன், திடீர் நகர்தலுக்கு உள்ளானால், தானாகவே கேமரா மூடிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்ப்ளஸ் 7 Pro-விலும் இதே வசதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆசுஸ் ஜென்போன் 6: விலை!

ஆசுஸ் நிறுவனம், தன் அடுத்த ஸ்மார்ட்போனான ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலையை நேற்று நடைபெற்ற அறிமுக நிகழவில் வெளியிடவுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இந்த அளவுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவுகளைவிட சற்று குறைவுதான். மேலும், அதன் விலைகள் பற்றிய அறிவிப்பில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலை 499 யூரோக்கள்(39,100 ரூபாய்), 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலை 559 யூரோக்கள்(43,800 ரூபாய்), 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலை 599 யூரோக்கள்(47,000 ரூபாய்) என அறிவித்திருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு(Midnight Black) மற்றும் சில்வர்(Twilight Silver) ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.

ஆசுஸ் ஜென்போன் 6: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஜென்போன் 6, அண்ட்ராய்ட் பை (Android Pie) அமைப்பு கொண்டது. மேலும் விரைவில் அண்ட்ராய்ட் Q மற்றும் அண்ட்ராய்ட் R-கான அப்டேட்கள் வெகுவிரைவில் அளிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது ஆசுஸ் நிறுவனம். குவால்காம் நிறுவனத்தின் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் செயல்படவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரைவிகிதம் மற்றும் 600நிட்ஸ் அளவிலான ஒளிர்வு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் திரையின், திரை மற்றும் ஸ்மார்ட்போனின் உடலுக்கு உள்ள விகிதம் 92சதவிகிதமாக உள்ளது. இதில், முன்புறத்திக் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படாததால் இந்த அளவிலான திரையை கொண்டுள்ளது.

 இரண்டு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 48 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என்ற அளவிலான இரண்டு கேமராக்கள் கொண்டுள்ளது. மேலும், இதில் 13 மேகாபிக்சல் கேமரா, அதி வைட் ஆங்கிள் கேமராவாக பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

5,000mAh அளவிலான, மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குயிக் சார்ஜ் 4.0 வசதியை கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.  ப்ளூடூத் v5, வை-பை மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 159.1x75.11x8.1-9.1mm என்ற அளவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 190 கிராம் எடை கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Asus ZenFone 6, Asus ZenFone 6 Price, Asus ZenFone 6 Specifications, Asus
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Sony Bravia 2 II Series டிவி Google TV OS வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது
  2. Alcatel V3 Pro 5G, V3 Classic 5G இந்திய செல்போன் சந்தையில் ஒரு புதிய அலை
  3. Google I/O 2025 விழா: Gemini 2.5 AI மற்றும் Deep Think Mode பல அம்சங்கள் அறிமுகம்
  4. Apple WWDC 2025 விழா ஜூன் 9ல் தொடங்கி அமர்க்களமாக ஆரம்பமாகிறது
  5. Vivo S30, S30 Pro Mini செல்போன்களின் வெளியீடு தேதி உறுதி செய்யப்பட்டது
  6. Realme GT 7T செல்போன் MediaTek Dimensity 8400 Max SoC சிப்செட் உடன் வருகிறது
  7. 30,000 ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் Alcatel V3 Ultra
  8. Lava Shark 5G செம்ம! 10,000 ரூபாய்க்கு கீழே விற்பனைக்கு வரும் செல்போன்
  9. iQOO Neo 10 Pro+ : மே 20 லாஞ்சுக்கு முன்னாடி ஸ்பெக்ஸ் வெளியாகிடுச்சு
  10. Realme GT 7 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9400 in SoC-ஐக் கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.