இந்தியாவில் வெளியாகிறது ஆசுஸ் "ஜென்போன் 6": விலை உள்ளே!

ஆசுஸ் ஜென்போன் 6 ஸ்மார்ட்போன் ரொட்டேட்டிங் கேமரா கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியாகிறது ஆசுஸ்

ஆசுஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஜென்போன் 6

ஹைலைட்ஸ்
  • ரொட்டேடிங் கேமராவை கொண்ட முதல் ஆசுஸ் ஸ்மார்ட்போன்
  • 48 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என்ற அளவிலான இரண்டு கேமராக்கள்
  • ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது
விளம்பரம்

கடந்த மே 16-ஆம் தேதி, ஆசுஸ் நிறுவனம் ஜென்போன் 6 ஸ்பெயினில் அறிமுகப்படுத்தியது. இந்த தாய்வான் நிறுவனம், தற்போது ஜென்போன் 6-ஐ இந்தியாவிலும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கென ஒரு பக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ள இந்த இ-விற்பனையாளர் நிறுவனம், விரைவில் விற்பனையாகவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. முன்புறம் முழுவதும் திரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், செல்பி எடுத்துப்பதற்கு ஒரு பட்டனை அழுத்தினாலே போதும், இந்த ஸ்மார்ட்போன் ரொட்டேட்டிங் கேமரா கொண்டுள்ளது. 

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தளத்தில், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது என குறிப்பிடப்பட்டுள்ள இந்த பக்கத்தில், எப்போது விற்பனைக்கு வரவுள்ளது என்பது பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு எந்த ஒரு முன்பதிவும் கிடையாது. நேரடியாக விற்பனை அன்று ஃப்ளாஷ் சேலில் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசுஸ் ஜென்போன் 6: விலை!

ஆசுஸ் நிறுவனம், தன் அடுத்த ஸ்மார்ட்போனான ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலையை நேற்று நடைபெற்ற அறிமுக நிகழவில் வெளியிடவுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இந்த அளவுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவுகளைவிட சற்று குறைவுதான். மேலும், அதன் விலைகள் பற்றிய அறிவிப்பில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலை 499 யூரோக்கள்(39,100 ரூபாய்), 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலை 559 யூரோக்கள்(43,800 ரூபாய்), 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலை 599 யூரோக்கள்(47,000 ரூபாய்) என அறிவித்திருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு(Midnight Black) மற்றும் சில்வர்(Twilight Silver) ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.

Asus ZenFone 6 Main 2


ஆசுஸ் ஜென்போன் 6: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஜென்போன் 6, அண்ட்ராய்ட் பை (Android Pie) அமைப்பு கொண்டது. மேலும் விரைவில் அண்ட்ராய்ட் Q மற்றும் அண்ட்ராய்ட் R-கான அப்டேட்கள் வெகுவிரைவில் அளிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது ஆசுஸ் நிறுவனம். குவால்காம் நிறுவனத்தின் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் செயல்படவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரைவிகிதம் மற்றும் 600நிட்ஸ் அளவிலான ஒளிர்வு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் திரையின், திரை மற்றும் ஸ்மார்ட்போனின் உடலுக்கு உள்ள விகிதம் 92சதவிகிதமாக உள்ளது. இதில், முன்புறத்திக் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படாததால் இந்த அளவிலான திரையை கொண்டுள்ளது.

 இரண்டு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 48 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என்ற அளவிலான இரண்டு கேமராக்கள் கொண்டுள்ளது. மேலும், இதில் 13 மேகாபிக்சல் கேமரா, அதி வைட் ஆங்கிள் கேமராவாக பொருத்தப்பட்டுள்ளது.

5,000mAh அளவிலான, மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குயிக் சார்ஜ் 4.0 வசதியை கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.  ப்ளூடூத் v5, வை-பை மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 159.1x75.11x8.1-9.1mm என்ற அளவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 190 கிராம் எடை கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இரண்டு ஸ்கிரீன்.. தரமான கேமரா! லாவா பிளேஸ் டியோ 3 அமேசான் தளத்தில் சிக்கியது! கம்மி விலையில் ஒரு மெகா லான்ச்
  2. "ஸ்லோ டிவி" பிரச்சனைக்கு எண்டு கார்டு! 4K QLED மற்றும் Mini LED வசதியுடன் Lumio டிவிகள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தாச்சு
  3. பவர்ஃபுல் போன்.. பட்ஜெட் விலை! Flipkart-ல் Redmi Note 14 Pro Plus மீது அதிரடி விலைக்குறைப்பு! உடனே முந்துங்கள்
  4. எந்த போன் வாங்கலாம்னு குழப்பமா இருக்கா? இதோ அமேசான் சேல் 2026-ன் டாப் 10 மொபைல் டீல்கள்! விலை மற்றும் ஆஃபர் விவரங்கள் உள்ளே
  5. ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் வாங்க இதுவே சரியான நேரம்! அமேசான் ரிபப்ளிக் டே சேலில் Samsung மற்றும் OnePlus சாதனங்களுக்கு மெகா ஆஃபர்
  6. S25 போன் வச்சிருக்கீங்களா? ஜனவரி அப்டேட்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சாம்சங் செய்யப்போகும் மெகா மாற்றங்கள்
  7. கையில வாட்ச்.. காதுல பட்ஜ்.. பட்ஜெட்டுக்குள்ள ஆஃபர்ஸ்! அமேசான் ரிபப்ளிக் டே சேல் 2026 - அதிரடி வேரபிள் டீல்கள் இதோ
  8. ஷாட்டா சொல்லப்போனா.. "விலை குறைப்பு திருவிழா!" அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 - டாப் டீல்கள் இதோ
  9. Apple MacBook முதல் Gaming Laptops வரை - அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு! எதை வாங்கலாம்? முழு விவரம் இதோ!
  10. பட்ஜெட் விலையில் ஒரு பிரீமியம் Samsung போன்! Galaxy A35 விலையில் ₹14,000 சரிவு! இப்போவே செக் பண்ணுங்க
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »