அசுஸ் நிறுவனம், ஆண்டுக்கு ஒரு ஜென்போன் தொடரில் ஒரு போனை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் அந்த நிறுவனத்திலிருந்து வெளிவர இருக்கும் மொபைல்போன் தான் இந்த அசுஸ் ஜென்போன் 6. இது குறித்த தகவல்களை இந்த நிறுவனம் வெளியிடாத நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர், மூன்று சிம் ஸ்லாட்கள், ஸ்மார்ட் கீ போன்ற வசதிகள் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்திருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 48 மெகா பிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற தகவல்களை சில குறிப்புகள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார் அந்த நிறுவனத்தை சேர்ந்த ஒரு அதிகாரி. இந்த ஸ்மார்ட்போன் வருகின்ற மே 16-ஆம் தேதி ஸ்பெயினில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசஸ் நிறுவனம், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், தன் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான ஜென்போன் 6-ன் டீசரை ஒரு புகைப்படம் ஒன்றுடன் வெளியிடிருந்தது ஆசுஸ் நிறுவனம். அதில், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னேப்ட்ராகன் 855 ஒரிங்கிணைக்கப்பட்ட அமைப்பு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் 3.5mm ஆடியோ ஜாக், நோட்டிபிகேசன் லைட் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்திருந்தது அந்த புகைப்படம். இந்த மொபைல்போனில் மூன்று ஸ்லாட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது, இரண்டு சிம்களுக்காகவும் ஒன்று மெமரி கார்டுக்காகவும் இருக்கலாம். மேலும், இதில் ஒரு ஸ்மார்ட் கீ பொருத்தப்பட்டுள்ளதாக அந்த படம் குறிப்பிடுகிறது. ஒருவேளை அந்த ஸ்மார்ட் கீ கூகுள் அசிஸ்டன்ட்-கான ஸ்மார்ட் கீ-யாக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனம், இந்த அறிவிப்பிற்கு முதல் நாள்தான் தனது புதிய போன்களான பிக்சல் 3a வகைகளில் இந்த மாதிரியான கூகுள் அசிஸ்டன்ட்-கான ஸ்மார்ட் கீ பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புது அறிவிப்பு, ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு போட்டியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு போன்று தெரிகிறது. இந்த புது அறிவிப்பின் வாயிலாக ஒன்ப்ளஸ் நிறுவனம், தான் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஆகிய போன்களுக்கு போட்டியாக இந்த போன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அந்த போன்களுடன் ஒப்பிடுகையில் சில சிறந்த அம்சங்களை வழங்கவுள்ளது, ஜென்போன் 6. ஒன்ப்ளஸ் போன்களில் ஆடியோ ஜாக், நோட்டிபிகேசன் லைட் மற்றும் மெமரி கார்டு வசதிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அசுஸ் நிறுவனம், தன் ஜென்போன் 6-ஐ ஒன்ப்ளஸ் தன் போனை வெளியிட்ட இரண்டு நாட்களில் வெளியிடவுள்ளது.
அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை சில ஹேஸ்டேக்கள் மற்றும் ஒரு மோர்ஸ் கோடுடன் பதிவிட்டிருந்தார். அந்த மோர்ஸ் கோடை, எழுத்து வடிவில் மாற்றிப்பார்க்கையில், அது இந்த ஜென்போன் சம்மந்தமான பதிவாக இருக்கலாம். மேலும், அந்த கோடை மாற்றிப்பார்க்கையில், இந்த ஜென்போன் 48 மெகா பிக்சல் மற்றும் 13 மெகா பிக்சல் என இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும், 5000mAh பேட்டரி அளவை கொண்டிருக்கும் போன்ற அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்த போன் ஆண்டுராய்டு 9.0 பை(Android 9 Pie) அமைப்பு கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 256GB சேமிப்பு அளவு மற்றும் 12GB RAM + 512GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்போன்களின் மதிப்பு இந்தியாவில் ரூபாய் 44.880, ரூபாய் 53,862 மற்றும் ரூபாய் 67,333 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்) மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதத்திலான திரையை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்