ROG Phone 9 செல்போன் நவம்பர் 19ல் Snapdragon 8 Elite உடன் வெளியிடப்படும் என்று Asus சமீபத்தில் அறிவித்தது
Photo Credit: 91Mobiles
Asus ROG Phone 9 will reportedly ship with an Android 15-based ROG UI and Game Genie
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Asus ROG Phone 9 செல்போன் பற்றி தான்.
ROG Phone 9 செல்போன் நவம்பர் 19ல் Snapdragon 8 Elite உடன் வெளியிடப்படும் என்று Asus சமீபத்தில் அறிவித்தது. ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் போது தைவான் நிறுவனமான Asus அதனுடைய ROG Phone 9 பற்றிய வடிவமைப்பை வெளியிட்டது. Asus ROG Phone 9 செல்போன் 5 0 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 5,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Asus ROG Phone 9 ஆனது 6.78-இன்ச் முழு-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) Samsung Flexible LTPO AMOLED திரையுடன் வருகிறது. இது 120Hz வரை புதுப்பிப்பு வீதம், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. பேனல் 2,500 nits உச்ச பிரகாசம் கொண்டுள்ளது. HDR10 சப்போர்ட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ரீடர் ஆகியவை இதில் இருக்கிறது. இது 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. . ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் Asus ROG Phone 9 ஆனது 1/1.56-இன்ச் சென்சார் கொண்ட 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5-மெகாபிக்சல் கொண்ட 50-மெகாபிக்சல் கொண்ட Sony Lytia 700 கேமராவை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும். Asus ROG Phone 8 செல்போன் மாடலும் இதேபோன்ற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
Asus ROG Phone 9 ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ROG UI வசதியுடன் வரும் என கூறப்படுகிறது. இதில் AirTriggers, Macro, பைபாஸ் சார்ஜிங் மற்றும் ஸ்கவுட் பயன்முறை ஆகியவை உள்ளது. AI அழைப்பு மொழிபெயர்ப்பாளர், AI டிரான்ஸ்கிரிப்ட், AI வால்பேப்பர் மற்றும் பலவற்றுடன் X Sense X Capture AI Grabber போன்ற பல AI கேமிங் அம்சங்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது 65W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
மேலும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5mm ஜாக் மற்றும் மூன்று மைக்ரோஃபோன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணைப்புக்காக, இதில் புளூடூத் 5.3, Wi-Fi 7, NFC, NavIC, GPS ஆகியவை உள்ளது. 227 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim
Strongest Solar Flare of 2025 Sends High-Energy Radiation Rushing Toward Earth
Raat Akeli Hai: The Bansal Murders OTT Release: When, Where to Watch the Nawazuddin Siddiqui Murder Mystery
Bison Kaalamaadan Is Now Streaming: Know All About the Tamil Sports Action Drama