அசுஸ் நிறுவனம் கடந்தாண்டு ரோக் போன் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், இந்தாண்டு தற்போது ரோக் போன் 3 மாடல் அறிமுகமாகியுள்ளது. இது முழுக்க முழுக்க கேமிங்கிற்காகவே உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலேயே பவர்புல் பிராசசரான குவால்காம் ஸ்நாப்டிராகன் 865+ SoC இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்காகவே கேம்கூல் 3 என்ற வெப்பத்தை தணிக்கும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள பில்ட்-இன் ஃபேன் ஸ்மார்ட்போனின் வெப்பத்தை 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்கிறது. எனவே, கேமிங் பிரியர்கள் பப்ஜி போன்ற அதிக மெமரி கொண்ட கேமை எந்தவித தொந்தரவும் இல்லாமல் விளையாடலாம். மொபைல் சூடாவது கட்டுப்படுத்தப்படுகிறது. 8GB + 128GB மெமரி கொண்ட அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை 49,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசுஸ் ரோக் போன் 3 இல் உள்ள சிறப்பம்சங்கள்:
சிம்: டூயல் நானோ சிம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 ரோக் யுஐ
திரை அளவு: 6.59 இன்ச்
திரைத்தன்மை: அமோலேட் டிஸ்பிள, 144Hz ரெவ்ரெஷ்ரேட்
தொடுதிரை ஆதரவு: HDR10+
பாதுகாப்பு அம்சம்: கார்னிங் கொரிலா கிளாஸ் 6 ப்ரொட்டெக்ஷன்
பிராசசர்: ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 865+ SoC பிராசசர்
பேட்டரி: 6,000 mAh
சார்ஜர்: 30W
கேமரா சிறப்பம்சம்:
அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா, அதாவது மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் 64MP பிரைமரி கேமராவில், சோனி IMX686 சென்சார், f/1.8 லென்ஸ உள்ளது. இந்தக் கேமராவுக்கு ஆதரவாக 125 டிகிரி வைட் ஆங்கிள் லென்சுடன் 13MP செகன்டரி கேமராவும், 5MP மக்ரோ லென்ஸ் கேமராவும் உள்ளது.
இதே போல் முன்பக்கத்தில் 24 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம், பின்புறம் இரண்டு கேமராக்கள் மூலமாக 4K வீடியோக்களை எடுக்க முடியும். கூடுதல் சிறப்பம்சங்களாக இது 5ஜி ஸ்மார்ட்போனாகும். வைஃபை, ஜிபிஎஸ், நேவிக், கைரோஸ்கோப், இன் டிஸ்பிளே விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் எடை 240 கிராம் அளவுக்கு, கைகளுக்கு ஓரளவு அடக்கமாக உள்ளது.,
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்