புதிய ஐபோன்கள், புதுப்பிக்கப்பட்ட ஐபாட் ப்ரோஸ், ஆப்பிள் வாட்சுகள், மேக் மினி ஃபோகஸ்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆகியவை வெளியாக உள்ளன
Photo Credit: 9to5Mac
இன்று இரவு 10.30 மணிக்கு ‘ஆப்பிள் லான்ச்’ நிகழ்ச்சி தொடங்க உள்ளது
ஆப்பிள் நிறுவனம் புதிய மாடல் போன்களை நாளை வெளியிடுகிறது என்று அறிவித்துள்ளது. அதில், புதிய ஐபோன்கள், புதுப்பிக்கப்பட்ட ஐபாட் ப்ரோஸ், ஆப்பிள் வாட்சுகள், மேக் மினி ஃபோகஸ்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆகியவை வெளியாக உள்ளன என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கலிஃபோர்னியாவில், இன்று நடக்க இருக்கும் நிகழ்ச்சியில், புதிய மாடல்கள் வெளியீடு நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று இரவு 10.30 மணிக்கு ‘ஆப்பிள் லான்ச்’ நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
மூன்று முக்கிய ஐபோன் மாடல்கள் வெளியாக உள்ளன:
ஐபோன் 9, ஐபோன் Xs, ஐபோன் Xs மேக்ஸ் ஆகியவை குறித்து விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் ப்ராஸஸர், சிறப்பான கேமரா, 5.8 இன்ச் ஸ்க்ரீனுடன் ஆப்பிள் ஐபோன் Xs வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் X போனின் புதுப்பிக்கப்பட்ட மாடலே இது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஐபோன் Xs மேக்ஸ் என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட ஆப்பிள் போன் வெளியாக உள்ளது எனவும் ஆப்பிள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து, ஐபோன் X போனின் குறைந்த விலை பட்ஜெட் போனாக, சிறிய மாற்றங்களுடன், 6.1 இன்ச் ஸ்க்ரீன், LCD, OLED ஆகிய வசதிகள் கொண்ட ஐபோன் Xr அல்லது ஐபோன்9 என்று பெயரிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மாடல்களின் விலை குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு இன்னும் வெளிவரவில்லை. எனினும், ஐபோன் Xs 77,900 ரூபாய்க்கும், ஐபோன் Xs மேக்ஸ் 88,400 ரூபாய்க்கும் விற்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ்
மேலும், 2018 ஆம் ஆண்டில், அதிக அளவிலான ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் முதல் இடம் பிடித்துள்ளது. 4.7 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்சுகள் விற்பனைக்கு வர உள்ளன.
வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் , பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீன் 384x480 பிக்ஸல்ஸ் கொண்டுள்ளது. மேலும், நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், ECG/ EKG செயல்பாடும் இடம் பெற்றுள்ளது.
ஐபாட் 8 ப்ரோ
புதுப்பிக்கப்பட்ட ஐபாட் 8 ப்ரோ வெளியாக உள்ளது. 18 வாட் பவர் அடாப்டர், 12.9 இன்ச், ஃபேஸ் ஐடி சப்போர்ட், 3.5 mm ஆடியோ ஜாக் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக் புக்
டச் ஐடி, ஃபிங்கர் ப்ரிண்ட் பாதுகாப்பு கொண்ட மேக் புக் மாடல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மேக் புக் வாடிக்கையாளர்களை கவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏர் பாட்ஸ், சார்ஜிங் மேட்
இந்த வையர்லெஸ் சார்ஜர் மூலம், ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை ஒரே சமயம் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. புதுப்பிக்கப்பட்ட டிசைன் கொண்ட வையர்லஸ் ஏர் பாட்ஸ் அறிமுகமாக உள்ளன.
மேக் மினி
கிராபிக் டிசைனர்களுக்கான மேக் மினி வெளியாக உள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் என்று ஆப்பிள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters