'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு....!' Amazon 'Diwali Special' Sale திங்கள் முதல் ஆரம்பம்!

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு....!' Amazon 'Diwali Special' Sale திங்கள் முதல் ஆரம்பம்!

Amazon Great Indian Festival Sale அக்டோபர் 25-ஆம் தேதி முடிவடைகிறது

ஹைலைட்ஸ்
  • Nokia 6.2 விலைக் குறைப்பபில் ரூ. 14,499-யாக பட்டியலிடப்பட்டுள்ளது
  • Samsung Galaxy M10s, A10s-க்கு ரூ.1000 தள்ளுபடி பெறும்
  • iPhone XR வெறும் 44,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
விளம்பரம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்மார்ட்போன்கள், கேஜெட்டுகள், பெரிய உபகரணங்கள் மற்றும் பலவற்றில் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடியுடன் வழங்க அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை மீண்டும் தொடங்க இருக்கிறது. புதிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தீபாவளி சிறப்பு விற்பனை அக்டோபர் 21 திங்கள் அன்று தொடங்கி அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். பாரம்பரியம் படி, அக்டோபர் 20-ஆம் தேதி மதியம் 12 மணிமுதல் பிரைம் உறுப்பினர்கள் அணுகலாம். OnePlus 7T, Samsung Galaxy M30s, Vivo U10 மற்றும் பல ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளையும் தள்ளுபடியையும் e-commerce வழங்கும். மொபைல் பாகங்களின் விலை ரூ. 49 முதல் ஆரம்பமாகும்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் சமீபத்திய பதிப்பிற்காக, இரு வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் அனைத்து Rupay கார்டுகளுக்கும் 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்க ஆக்சிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கியுடன் இந்த தளம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 8 Pro மற்றும் Redmi Note 8 ஆகியவை முதல் முறையாக இந்த ஸ்பெஷல் சேலில் விற்பனைக்கு வரும். முதல் விற்பனை அக்டோபர் 21-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும். 1120 ஜிபி டேட்டா, அண்லிமிடெட் காலிங்கை Airtel வழங்குகிறது.

Samsung Galaxy M10s மற்றும் Samsung Galaxy A10s-க்கு ரூ. 1,000 தள்ளுபடியாகவும், Vivo U10 வாங்குபவர்களுக்கு ப்ரீபெய்ட் ஆப்ஷனில் ரூ. 1,000 தள்ளுபடி என பட்டியலிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான Nokia 6.2 தற்காலிக விலைக்குறைப்பை பெறும். மேலும், ரூ. 15,999-க்கு பதிலாக ரூ. 14,499 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. OnePlus 7 குறைக்கப்பட்ட விலையில் ரூ. 29,999-யாகவும், Redmi 7A ரூ. 6,499-க்கு பதிலாக ரூ. 4,999-யாக விற்பனை செய்யப்படுகிறது. 

OnePlus 7 Pro விலைக்குறைப்பில், ரூ. 43,999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் iPhone XR வெறும் 44,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. budget மற்றும் mid-range போன்களையும் பட்டியலிட்டுள்ளது. Poco F1-ன் விலை ரூ. 14,999 முதல் விற்பனையை தொடங்க உள்ளது. power banks மற்றும் Bluetooth headsets ரூ. 399 முதல் ஆரம்பமாகிறது. அனைத்து மொபைல் ஒப்பந்தங்களையும் காண, பிரத்யேக பக்கத்திற்குச் செல்லவும்.

அமேசான் விற்பனையானது உபகரணங்கள் மற்றும் டிவிகளில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஹோம் மற்றும் கிச்சன் தயாரிப்புகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், Bajaj FinServ கார்டுகள் மற்றும் Amazon Pay ICICI Credit Card-ல் வரம்பற்ற வெகுமதி புள்ளிகள் (unlimited reward points) ஆகியவற்றிற்கான no-cost EMI முதல் பலவிதமான நிதி விருப்பங்களும் (finance options) இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற அமேசான் தயாரிப்புகளான Echo Show, FireTV Stick, Kindle மற்றும் பலவற்றை தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு வரும்போது, HP Core i5 1TB HDD laptop-ன் விலை 42,990-ரூபாயாகவும், Sony 5100L camera-வின் விலை 27,990-ரூபாயாகவும், Samsung Galaxy Active Watch-ன் விலை 17,990-ரூபாயும் மற்றும் Boat Airdopes-ன் விலை 2,499-ரூபாயாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அனைத்து ஒப்பந்தங்களையும் காண, அமேசான் இந்தியாவின் விற்பனை பக்கத்திற்குச் செல்லவும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Enjoy 80 பெரிய பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
  2. இந்தியாவில் அறிமுகமானது அட்டகாசமான Insta360 X5 புதிய 360 டிகிரி கேமரா
  3. Chromebook மாடல்களான CX14 மற்றும் CX15 அறிமுக செய்த ASUS நிறுவனம்
  4. ஆப்பிள் வாட்ச்களுக்கு இணையான அம்சம் இருக்கும் Redmi Watch Move
  5. HMD Global நிறுவனம் Mattel உடன் இணைந்து அறிமுகப்படுத்தும் Barbie Phone
  6. CMF Phone 2 Pro செல்போன் ஏப்ரல் 28ல் உலகமெங்கும் அறிமுகமாகிறது
  7. மார்க்கெட்டில் விலை குறைந்த 5G மாடல் போனாக அறிமுகமாகிறது Itel A95 5G
  8. 5G ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புரட்சி செய்யப்போகும் OPPO K12s 5G செல்போன்
  9. OPPO நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போன் OPPO A5 Pro 5G
  10. மோட்டோரோலாவின் முதல் லேப்டாப் Moto Book 60 இந்தியாவில் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »