அமேசான் கிரேட் இந்தியன் சேலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், இந்த தள்ளுபடி விற்பனையில் எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு சலுகை என்பது குறித்த விவரங்களை அமேசான் தற்போது வெளியிட்டு வருகிறது.
அமேசானின் கிரேட் இந்தியன் சேலில், பட்ஜெட் போன் முதல் அனைத்து விலையிலான போன்களும் இந்த தள்ளுபடி விற்பனையில் இடம்பெறுகிறது. இதில், ஒன்பிளஸ்7 ப்ரோ, ஐபோன் XR, சாம்சங் கேலக்ஸி M30, சியோமி ரெட்மி 7 உள்ளிட்ட போன்கள் இடம்பெறுகின்றன.
அமேசான் கிரேட் இந்தியன் சேலில், ஐபோன் XR, ஒன்பிளஸ்7 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி நோட் 9, ஓப்போ ரெனோ 2 உள்ளிட்ட போன்கள் அதன் சாதாரண விலையில் இருந்து குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐபோன் XR 64ஜிபி மாடல் ரூ.49,990 லிருந்து தொடங்குகிறது.
ஒன்பிளஸ் 7 ரூ.32,999க்கும், 7 ப்ரோ பிளாக் 6ஜிபி +128ஜிபி மாடல் ரூ.48,999க்கும் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 9, 6ஜிபி +129ஜிபி வேரியண்ட் ரூ.57,990க்கு கிடைக்கிறது. ஹூவாய் மேட்20ப்ரோ ரூ.54,990க்கும் கிரேட் இந்தியன் சேலின் போது மேலும் குறைவாக கிடைக்கும் என தெரிகிறது.
மத்திய தர ரக மாடல்களில், கேலக்ஸி M30, தற்போது ரூ.13,990க்கு அமேசானில் விற்பனையாகி வரும் இந்த போன் தள்ளுபடி விலை எவ்வளவு என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை, எனினும் தள்ளுபடியில் பங்கேற்கிறது.
இதேபோல், ஓப்போ K3, சியோமி Mi A3, உள்ளிட்ட போன்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரெட்மி 7 தற்போது ரூ.7,499க்கும் கிடைக்கும் அந்த போன் அமேசான் சேலில் மேலும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில், சியோமி போன்களுக்கான சிறப்பு தள்ளுபடி இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து, சாம்சங், ஓப்போ, விவோ உள்ளிட்ட போன்களுக்கான தள்ளுபடி குறித்த தகவல் நாளை அறிவிகப்பட உள்ளது. இதேபோல், ஒன்பிளஸ் மற்றும் ஹூவாய் போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்களுக்கான தள்ளுபடி விவரமும் அடுத்தடுத்தது வர இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்