அமேசான் நிறுவனம் திங்கட்கிழமையிலிருந்து சலுகை விலையில் மொபைல்போன்கள் விற்பனை ஒன்றை துவங்கியது. 'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்' (Amazon Fab Phones Fest) என பெயரிடப்பட்டுள்ள இந்த விற்பனை ஜூன் 13 வரை தொடரம் எனவும் அறிவித்திருந்தது. இந்த விற்பனையில் ஒன்ப்ளஸ் 6T, ஐபோன் X, சாம்சங் கெலக்சி M30, ஹவாய் P30 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அதிக சலுகைகளை வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த விற்பனையில் கவணிக்கபட வேண்டிய சில ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதொ!
ஒன்ப்ளஸ் 6T (OnePlus 6T)
இந்த விற்பனையில் ஒன்ப்ளஸ் 6T-யின் விலையை 27,999 ரூபாயாக குறைத்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 32,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை: 27,999 ரூபாய்
ஆப்பிள் ஐபோன் XR (Apple iPhone XR)
இந்த விற்பனையில் சலுகையை பெற்றிருக்கும் மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட்ப்போன் ஆப்பிள் ஐபோன் XR. இந்த ஸ்மார்ட்போன், இந்த விற்பனையில் 58,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. இது, இதன் முந்தைய விற்பனை விலையிலிருந்து ஆயிரம் ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எச் டி எஃப் சி கார்டுகளுக்கு 10 சதவிகித தள்ளுபடியை அளித்துள்ளது அமேசான் நிறுவனம். அதுமட்டுமின்றி, இந்த ஐபோனிற்கு 7,500 ரூபாய் வரையில் சலுகைகளை அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி 53,100 ரூபாய் அளவிற்கு குறைந்த விலையில் இந்த ஐபோன் XR-ஐ பெற்றுக்கொள்ளலாம்.
விலை: 58,999 ரூபாய்
ஹானர் 10 லைட் (Honor 10 Lite)
இந்த விற்பனையில் கவணிக்கப்பட வேண்டிய ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன், ஹானர் 10 லைட். 6.21-இன்ச் FHD+ திரை, இரண்டு பின்புற கேமரா, 24 மெகாபிக்சல் முன்புற கேமரா, 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு என்ற சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்'-ல் 11,999 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை: 11,999 ரூபாய்
Mi A2 (6GB, 128GB)
6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi A2 ஸ்மார்ட்போன், தற்போதைக்கு அமேசானில் 15,999 ரூபாய் என்ற விலையில் கிடைக்கவுள்ளது. 5.99-இன்ச் FHD+ திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. கொரில்லா கிளாஸ் திரை, இரண்டு பின்புற கேமரா, 20 மெகாபிக்சல் செல்பி கேமரா என்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
விலை: 15,999 ரூபாய்
ஹானர் வியூ 20 (Honor View 20)
ஹானரின் பிரீமியம் போனாக ஹானர் வியூ 20-க்கு இந்த விற்பனையில் 3,000 ரூபாய் தள்ளுபடியை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். அதன்படி 35,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிக்கொண்டிருந்த ஸ்மார்ட்போனை, இந்த சலுகை விற்பனையில் 32,999 ரூபாய் என்ற விலையில் பெற்றுக்கொள்ளலாம். 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 25 மெகாபிக்சல் செல்பி கேமரா, 6.25-இன்ச் FHD+ திரை, கிரின் 980 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்.
விலை: 32,999 ரூபாய்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்