iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது
Photo Credit: Apple
iPhone 16 and iPhone 16 Plus are both equipped with a vertical camera layout
iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் புதிய A18 சிப் மூலம் இயக்கப்படுகின்றன. iOS 18ல் இயங்குகின்றன. செயற்கை நுண்ணறிவை கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வந்துள்ளது. பொருத்தப்பட்டுள்ளன. Action Button மற்றும் புதிய கேமரா கண்ட்ரோல் பட்டனையும் கொண்டுள்ளது.
iPhone 16 விலை இந்தியாவில் தோராயமாக ரூ. 67,100 இருக்கும் என தெரிகிறது. அதே நேரத்தில் iPhone 16 Plus 128GB மெமரி மாடல் ரூ. 75,500 விலையில் தொடங்குகிறது. இரண்டு போன்களும் 512ஜிபி வரை மெமரியுடன் கிடைக்கின்றன. கருப்பு, இளஞ்சிவப்பு, டீல், அல்ட்ராமரைன் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும். முன்கூட்டிய ஆர்டர்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி விற்பனை தொடங்கும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 16 ஆனது iOS 18ல் இயங்கும். இரட்டை சிம்(Nano+eSIM) கைபேசியாகும். இது 3nm octa-core A18 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6-core CPU, 5-core GPU கொண்டுள்ளது. 16-கோர் செயல்பாடு உள்ளது. iPhone 16 Pro மாடலைப் போலவே இந்த ஃபோன்களும் WWDC 2024 விழாவில் ஆப்பிள் நிறுவனம் கூறிய நுண்ணறிவு அம்சங்களை சப்போர்ட் செய்யும். இது ஐபோன் 15 Pro மாடல்களுக்கும் பொருந்தும்.
iPhone 16 மாடல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 2,000 நிட்கள் வரை உச்ச பிரகாசம், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் பாதுகாப்பு மற்றும் டைனமிக் ஐலேண்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
iPhone 16 plus மாடலும் இதே போன்ற வசதிகளை கொண்டுள்ளது, ஆனால் பெரிய 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் OLED டிஸ்ப்ளே உள்ளது. புதிதாக Action Button என்ற பொத்தானைப் பெறுகின்றன. மேலும் வலது பக்கத்தில் புதிய கேமரா கட்டுப்பாட்டு பொத்தானையும் பெறுகின்றன. தட்டுதல் அல்லது ஸ்லைடு மூலம் படங்களை பெரிதாக்கவும், கிளிக் செய்யவும் முடியும். வீடியோவைப் பதிவு செய்யவும் இதனை பயன்படுத்தலாம்.
ஐபோன் 15 தொடரைப் போலவே iPhone 16 மாடல்களிலும் 2x இன் சென்சார் ஜூம் மற்றும் 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா ஆட்டோஃபோகஸ் வசதியை கொண்டுள்ளது. அல்ட்ராவைடு கேமரா மேக்ரோ புகைப்படம் எடுப்பதையும் செயல்படுத்துகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, முன்புறத்தில் 12 மெகாபிக்சல் TrueDepth கேமரா உள்ளது. புதிய கேமரா வடிவமைப்பு ஸ்பேஷியல் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கும் உதவுகிறது.
iPhone 16 மற்றும் iPhone 16 Plus மாடலில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத், GPS மற்றும் NFC மற்றும் USB Type-C போர்ட் இணைப்பு வசதிகள் உள்ளது. 512GB வரை மெமரி கொண்ட மாடல்களும் இருக்கிறது. ரேம் அல்லது பேட்டரி திறன் பற்றிய தகவல் இல்லை. இது பற்றிய தகவலை ஆப்பிள் எப்போதும் வெளியிடுவது இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?