Insta360 Ace Pro 2 கேமரா அக்டோபர் 22ம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Photo Credit: Insta360
Insta360 Ace Pro 2 now comes with a removable lens guard and a new wind guard
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Insta360 Ace Pro 2 கேமரா பற்றி தான்.
Insta360 Ace Pro 2 கேமரா அக்டோபர் 22ம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறந்த படத் தரம், எளிதாகப் படம்பிடித்தல், மேம்படுத்தப்பட்ட ஆடியோ, முரட்டுத்தனமான வடிவமைப்பு மற்றும் முந்தைய மாடல்களை விட மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களைக் கொண்டுள்ளது. Insta360 Ace Pro மாடலில் மேம்படுத்தப்பட்ட மாடலாக Insta360 Ace Pro 2 கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 8K வீடியோ பதிவு திறன் கொண்டது. 39 மீட்டர் வரை நீரில் மூழ்கினாலும் ஒன்றும் ஆகாது. பிரத்யேக ப்ரோ இமேஜிங் சிப் மற்றும் லைகா-பொறியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது.
Insta360 Ace Pro 2 விலையானது ரூ. 34,000 என்கிற அளவில் தொடங்குகிறது. இது காற்று பாதுகாப்பு, பேட்டரி, மவுண்ட், மைக் கேப் மற்றும் USB டைப்-சி கேபிள் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஆக்ஷன் கேமரா இரட்டை பேட்டரி பேண்டலிலும் கிடைக்கிறது. அதில் மேற்கூறிய அதே பாகங்கள் உள்ளன, ஆனால் இரண்டு பேட்டரிகள் வரும். இதன் விலை ரூ. 35,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. Insta360 புதிய சலுகைகள் ஏற்கனவே இணையதளத்தில் கிடைக்கிறது.
Insta360 Ace Pro 2 கேமரா 1/1.3-inch 8K சென்சாருடன் கூடிய லைக்கா SUMMARIT லென்ஸ் கொண்டுள்ளது. இது MP4 வடிவத்தில் ஸ்லோ மோஷனில் வினாடிக்கு 30 பிரேம்கள் (fps) கொண்ட 4K 60fps Active HDR வீடியோ மற்றும் 4K 120fps அளவில் 8K வரை வீடியோக்களைப் படம் பிடிக்க உதவுகிறது. அதிகபட்சமாக 50-மெகாபிக்சல் தெளிவுத்திறனில் இதில் படங்களை எடுக்க முடியும்.
இந்த ஆக்ஷன் கேமராவானது ப்யூர்வீடியோ எனப்படும் பிரத்யேக ஷூட்டிங் முறையை கொண்டுள்ளது. டியூன் செய்யப்பட்ட AI வசதி மூலம் சத்தத்தைக் குறைக்கவும், குறைந்த-ஒளி சூழ்நிலைகளில் நிகழ்நேரத்தில் விவரங்களை மேம்படுத்தவும் உதவுகிறது. Insta360 Ace Pro 2 கேமராவை குரல் அல்லது சைகை மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆட்டோ எடிட் மற்றும் AI ஹைலைட்ஸ் அசிஸ்டெண்ட் போன்ற AI மூலம் இயங்கும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
Insta360 Ace Pro 2 கேமரா 2.5-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன் வருகிறது. இது முந்தைய மாடலை விட 70 சதவீதம் அதிக பிக்சல் அடர்த்தி, 6 சதவீதம் சிறந்த பிரகாசம் மற்றும் 100 சதவீதம் நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டது.
இது 12 மீட்டர் ஆழம் வரை நீர்ப்புகாத வடிவமைப்பு கொண்டுள்ளது. -20 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலையைக் கையாளக்கூடியது. 1,800mAh பேட்டரியை கொண்டுள்ளது. 18 நிமிடங்களில் 80 சதவீதமும், 47 நிமிடங்களில் 100 சதவீதமும் சார்ஜ் செய்ய முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset