ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு (2018) மூன்று புதிய ஆப்பிள் ஐ-போன்களைக் களமிறக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மிங் சீ குவோ வெளியிட்டுள்ளார். அறிமுகம் ஆகவுள்ள ஐ-போன்கள் விரைவில் சார்ஜ் ஆகும் வகையிலும், பேட்டரி நீண்ட நேரம் தாங்கும் வகையிலும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் முன்னதாகவே இரண்டு மாடல்களின் வகைகளைப் பற்றிக் கூறியுள்ளது. அதாவது ஓஎல்இடி டிஸ்ப்ளே உடனான ஒரு மாடலும், மற்றொன்று எல்இடி வகை மாடலாகவும் விற்பனைக்கு வர உள்ளது. 6.1 இன்ச் அளவு உள்ள ஐ-போன் சுமார் 40,300 ரூபாயிலிருந்து 47,000 ரூபாய் வரையில் இருக்கலாம் என்றும் 5.8 இன்ச் ஐ- போன் 53,700 ரூபாயிலிருந்து 60,400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் 6.5 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி டிஸ்ப்ளே உடனான மாடல் 60,400 ரூபாயிலிருந்து 67,100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படும் என உத்தேச விலைப்பட்டியல் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு ஆப்பிள் ஐ- போன்களின் விலை குறைந்தே சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. உற்பத்தித் திறன் அதிகரித்து உள்ளதாலும் விலை குறைவாகவே இந்த ஆண்டின் அறிமுகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான புதிய மாடல்கள் அனைத்தும் செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகம் ஆவது உறுதியாகி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்