பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. இதில் ஐபோன் 16 ஸ்மார்ட்போன், மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Photo Credit: Apple
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 இல் ஐபோன் 16 க்கு ரூ. 23,000 வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இரண்டுமே போட்டி போட்டுக்கொண்டு சிறப்பு தள்ளுபடிகளையும், விற்பனைகளையும் அறிவிக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில், பிளிப்கார்ட்டின் மிகவும் பிரபலமான 'பிக் பில்லியன் டேஸ்' (Big Billion Days) விற்பனை செப்டம்பர் 23, 2025 அன்று தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையின் பெரிய ஹைலைட்டே, ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆன ஐபோன் 16-க்கு கொடுக்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடிதான். பிளிப்கார்ட் இணையதளத்தில் தற்போது ஐபோன் 16-ன் 128GB மாடல் ரூ. 74,900 என பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், வரவிருக்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, இந்த போனின் விலை வெறும் ரூ. 51,999 ஆகக் குறையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட ரூ. 23,000 வரை தள்ளுபடி என்பது ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு பெரிய போனஸ் என்றே சொல்லலாம். ஏன்னா, ஐபோன் போன்ற பிரீமியம் போன்கள்ல இவ்வளவு பெரிய விலை குறைப்பு அவ்வளவு எளிதா நடக்காது. அதுவும், ஒரு புது மாடலுக்கு இந்த அளவுக்கு தள்ளுபடி கொடுக்கிறது ரொம்பவே அரிதான விஷயம்.
இந்த தள்ளுபடி விலையை பார்த்தா, புதுசா ஒரு ஃபிளாக்ஷிப் போன் வாங்கணும்னு இருந்தவங்களுக்கு இது ஒரு சரியான வாய்ப்பு. இப்போ மார்க்கெட்ல இருக்கிற சாம்சங், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களோட டாப் எண்ட் போன்களுக்கு ஐபோன் 16 ஒரு நேரடி போட்டியாகவே இருக்கும். இந்த விலை குறைப்போட ஐபோன் 16 வாங்கும்போது, நீங்க வெறும் போனை மட்டும் வாங்கல, ஆப்பிள் கம்பெனியோட ஈக்கோசிஸ்டம், பாதுகாப்பு, சாஃப்ட்வேர் அப்டேட்கள்னு நிறைய விஷயங்களையும் சேர்த்து வாங்கறீங்க.
ஐபோன் 16 மட்டுமில்லாம, ஐபோன் 14, ஐபோன் 16 ப்ரோ, மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்ற மற்ற மாடல்களுக்கும் இந்த விற்பனையில் கவர்ச்சியான சலுகைகள் இருக்கும் என பிளிப்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளது. ஐபோன் மட்டுமில்லாம, இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள்னு எல்லா பொருட்களுக்கும் ஆபர் இருக்கும்னு சொல்லியிருக்காங்க.
இந்த மெகா சேல் அப்போ, உங்களுக்கு ஒரு அட்வைஸ்! உங்ககிட்ட ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் இருந்தா, போன் விலைல இருந்து கூடுதலா 10% உடனடித் தள்ளுபடியும் கிடைக்கும். அதனால, இந்த ஆஃபரை சரியா பயன்படுத்தி ஐபோனை வாங்கிக்கலாம். மேலும், உங்க பழைய போனை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செஞ்சு, இன்னும் கொஞ்சம் அதிக தள்ளுபடி பெற முடியும். மொத்தத்துல, புது போன் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது ஒரு சரியான நேரம். இந்த விலை குறைந்த நாட்களில் உங்களுக்கான போனை வாங்கி மகிழலாம். இந்த விற்பனை குறித்த மேலும் சில தகவல்கள் பிளிப்கார்ட் தளத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்