சீனாவில் ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு விவரம்!

சீனாவில் ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு விவரம்!

ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் சில்வர் கலரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • RedmiBook Air 13 launched in China
  • There is no information on international availability
  • RedmiBook Air 13 will go on sale starting August 17 in China
விளம்பரம்

சீனாவில் ரெட்மிபுக் ஏர் சீரிஸின் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

ஷாவ்மியின் ஏர் சீரிஸ் லேப்டாப் வரிசையில், ரெட்மிபுக் ஏர் 13 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகமெல்லிதாக, எடைகுறைவாக இருக்கும் இந்த லேப்டாப், இன்டெல் கோர் i5 10 ஜெனரேஷன் உடன் வருகிறது.  ரெட்மி தரப்பில் முதல் கேமிங் லேப்டாப் இதுவே ஆகும். 

ரெட்மிபுக் ஏர் 13 விலை

ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் இரண்டு விதமான வேரியன்டுகளில் அறிமுகமாகியுள்ளது. 8ஜிபி ரேம் +512ஜிபி SSD மாடலின் விலை CNY 4,699 (இந்திய மதிப்பில் 50,600 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல்,  16ஜிபி ரேம்+512 SSD வேரியன்டின் விலை CNY 5,199 (இந்திய மதிப்பில் 56,000 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் சிலவர் கலரில், ஒரே நிறத்தில் மட்டுமே வந்துள்ளன. ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் சீனாவில் ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் விற்பனைக்கு வருகிறது. தற்சமயம் இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. மற்ற நாடுகளில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

ரெட்மிபுக் ஏர் 13 சிறப்பம்சங்கள்:

ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப்பில் விண்டோஸ் 10 ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் திரை 13.3 இன்ச் ஆகும். இதில் உள்ள பெசல் மிகச்சிறியதாக இருப்பதால், திரையின் அளவு முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் வெப்கேமரா இல்லை. வீடியோ காலிங் செய்ய வேண்டுமென்றால், தனியாக ஒரு வெப்கேமரா தான் வாங்கி மாட்ட வேண்டும். 

குவாட்கோர் 10 ஜெனரேசன் இன்டல் கோர் i5-10210Y CPU, 1GHz பிராசசர் வழங்கப்பட்டுள்ளது. இன்டல் இன்டகிரேட்டட் கிராபிக்ஸ் சிப் செட் உடன் வருகிறது. 

113 பேக்ஸ் 41Wh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது சுமார் 8 மணி நேரம் வரையில் சார்ஜ் நீடித்து நிற்கும். வைஃபை6, ப்ளூடூத் v5.0, இரண்டு USB டைப் சி போர்ட்கள், 3.5mm ஹெட்போன் ஜேக் ஆகியவைகொடுக்கப்பட்டுள்ளன. US டைப் சி சார்ஜிங் வசதியும் உள்ளது. லேப்டாப் சூடாவதைக் கட்டுப்படுத்தும் வகையில், காற்றுபோக்கும் வகையிலான அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பின் மொத்த எடை 1.05 கிலோ.


Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

  • KEY SPECS
  • NEWS
Display size 13.30-inch
Display resolution 2560x1600 pixels
Touchscreen No
Processor Core i5
RAM 8GB
OS Windows 10
Hard disk No
SSD 512GB
Weight 1.05 kg
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »