இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரெட்மிபுக் வர்த்தக முத்திரையை ஷாவ்மி பதிவு செய்தது.
ரெட்மிபுக் மற்றும் எம்ஐ மடிக்கணினிகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்துள்ளது
ஷாவ்மி இதுவரை, சீனாவில் மட்டுமே மடிக்கணினிகளை விற்பனை செய்துள்ளது. இந்த மடிக்கணினிகள் எம்ஐ மற்றும் ரெட்மி பிராண்டுகளின் கீழ் இந்தியாவுக்கு வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீன நிறுவனம் இந்தியாவில் ரெட்மிபுக் வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பித்தது.
பிப்ரவரியில் இந்தியாவில் ரெட்மி புக் 13 வெளியாவதாக வதந்திகள் வந்தன. ஆனால் அது வெளியிடப்படவில்லை. இந்தியாவில் ஷாவ்மி லேப்டாப் அறிமுகம் செய்திகள் மீண்டும் முன்னுக்கு வந்தன. இந்த விவகாரம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
.@manukumarjain said in today's online meeting with retailers that Mi/ Redmi Laptops will launch in India ASAP (HOPE!). Didn't provide any concrete date/timeline. Not planning to launch any Tabs like Mi Pad, though. Didn't comment on upcoming launches like Mi 10 lite/K30 Pro ????????
— Ishan Agarwal (@ishanagarwal24) April 27, 2020
எம்ஐ மற்றும் ரெட்மி மடிக்கணினிகள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று சமீபத்தில் ட்விட்டரில் இஷான் அகர்வால் தெரிவித்தார். நிறுவனம் இந்த வாரம் சில்லறை விற்பனையாளர்களுடன் பேசி வருகிறது. வெளியீட்டின் சரியான நேரம் தெரியவில்லை.
நிறுவனத்தின் லேப்டாப் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Xiaomi தலைவர் Manu Kumar Jain கூறவில்லை. கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்ததும் ஷாவ்மியின் முதல் மடிக்கணினி இந்திய சந்தைக்கு வரக்கூடும்.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks
Battery Breakthrough Uses New Carbon Material to Boost Stability and Charging Speeds
Ek Deewane Ki Deewaniyat Is Streaming Now: Know Where to Watch the Romance Drama Online