1TB PCle SSD வரை வரும் மூன்றில் ஒரே லேப்டாப் Xiaomi RedmiBook 13 ஆகும்.
ரெட்மிபுக் 16 கிரே நிற வேரியண்டில் வருகிறது
ஷாவ்மி மூன்று புதிய லேப்டாப்களைக் கொண்டுவந்துள்ளது. ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14 மற்றும் ரெட்மிபுக் 16 ஆகியவற்றை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மடிக்கணினிகளில் AMD ரைசன் 4000 சீரிஸ் செயலி உள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த மடிக்கணினிகளில் முறையே 13 இன்ச், 14 இன்ச் மற்றும் 16 இன்ச் டிஸ்ப்ளேக்கள் உள்ளன. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனம் இந்த லேப்டாப்களை ஜூன் 1 முதல் சீனாவில் விற்பனை செய்யத் தொடங்கும்.
RedmiBook 13 விலை சிஎன்ஒய் 3,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,200)-ல் இருந்து தொடங்குகிறது. RedmiBook 14 விலை சிஎன்ஒய் 3,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.39,000)-ல் இருந்து தொடங்குகின்றன. RedmiBook 16 விலை சிஎன்ஒய் 4,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,700)-ல் இருந்து தொடங்குகின்றன. இந்த லேப்டாப்கள் ஜூன் 1 ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும்.
மூன்று புதிய லேப்டாப்களிலும் AMD ரைசன் 4000 சீரிஸ் செயலிகள் உள்ளன. ஷாவ்மி AMD Ryzen 5 4500U மற்றும் AMD Ryzen 7 4700U செயலிகளைப் பயன்படுத்துகிறது. இந்த லேப்டாப்கள் 16 ஜிபி டிடிஆர் 4 ரேம் மற்றும் 512 ஜிபி வரை சாட்டா எஸ்எஸ்டி வரை பயன்படுத்துகின்றன. ரெட்மிபுக் 13, ரைசன் 7 சீரிஸ் செயலியுடன் ஒரே ஒரு வேரியண்டில் கிடைக்கும். அந்த லேப்டாப்பில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி எஸ்.எஸ்.டி உள்ளது.
மூன்று லேப்டாப்களிலும் முழு எச்டி 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்கள் உள்ளன. ரெட்மிபுக் 13 மற்றும் ரெட்மிபுக் 14 ஆகியவை 250nits பிரகாசத்தைக் கொண்டுள்ளன. அதே சமயம், ஷாவ்மி, ரெட்மி புக் 16-ல் 300 நைட்ஸ் பிரகாசத்தைக் கொண்டுள்ளது. ரெட்மிபுக் 13 மற்றும் ரெட்மிபுக் 14 ஆகியவை 40Wh பேட்டரிகளைக் கொண்டுள்ளன. ரெட்மிபுக் 16, 46Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பு அம்சங்களில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட், எச்.டி.எம்.ஐ போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Google’s Chrome 153 Starts Two-Week Release Cycle Promising Faster Updates and Secure Browsing
OpenAI Says Its AI Has Solved the 90-Year-Old Navier–Stokes Problem