சியோமியின் துணை நிறுவனமான ரெட்மீ, இந்த மாதத்தில் சீனாவில், புதிய ஸ்மார்ட்போன் ஒன்ற வெளியிடும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒன்று அல்ல, இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்த நிறுவனம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
தற்போது புதிதாக வெளியான ஒரு தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து மற்றொரு தயாரிப்பையும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸ்ர், 48 மேகாபிக்சலுடன் வெளியிடவுள்ள ஒரு ஸ்மார்ட்போனுடன், ஒரு லேப்டாப் ஒன்றையும் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப வல்லுநர் சுதான்சூ ஆம்போர், இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியபொழுது, ரெட்மீ நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனுக்கான அறிவிப்பின்போது, அதனுடன் சேர்ந்து, ஒரு புதிய லேப்டாப்பிற்கான அறிவிப்பையும் அறிவிக்கலாம்.
ஒருவேளை இந்த தகவல் உறுதியானது என்றால், அந்த லேப்டாப்பை ரெட்மீ என்ற பெயரில் அறிவிக்கும். ஹவாய் நிறுவனம் எப்படி அதன் துணை நிறுவனமான ஹானர் நிறுவனத்தின் பெயரில் லேப்டாப்களை வெளியிட்டதோ, சியோமி நிறுவனமும், அதே முறையை பின்பற்றவுள்ளதாக தெரிகிறது.
தன் துணை நிறுவனமான, ரெட்மீயின் பெயர்களை வெளியிடப்போகிறது. ஹானர் நிறுவனம் மேஜிக்புக் என்ற பெயரிலும், ஹவாய் நிறுவனம் மேட்புக் என்ற பெயரிலும் தன்னுடைய நிறுவனத்தின் லேப்டாப்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் கணிப்பு சரியாக இருந்தால் சில சிறந்த அம்சங்களுடன், குறைந்த விலையில் தன் லேப்டாப்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் சியோமியால் வெளியிடப்படும் எம் ஐ நோட்புக் லேப்டாப்களை விட விலை குறைவாக இருக்கும்.
முன்னதாக இந்த நிறுவனத்தால் வெளியிடவுள்ள ஸ்மார்ட்போன் பற்றி பொது மேலாளர் லூ வெய்பிங் வெளியிட்டிருந்த ஒரு டீசரில், இந்த போன் திரையிலேயே ஃப்ங்கர்பிரிண்ட் மற்றும் 2 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி என்ற தகவல்களை வெளியிட்டிருந்தார்.
மேலும், முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.39-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை கொண்டு வெளியாகும். மொத்தமாக மூன்று பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மேகாபிக்சல் கேமராவும், 8 மேகாபிக்சல் மற்றும் 13 மேகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்கள் இருக்கும். மேலும் முன்புறத்தில் 30 மேகாபிக்சல் அளவு கொண்ட செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.
அதுமட்டுமின்றி,ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பை ரெட்மீ நிறுவனம் மே 13ஆம் தேதி அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்