ஆப்பிள் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில் தனது புதிய மேக்புக் ஏர் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது
மேக்புக் ஏர் விலையானது இந்தியாவில் ரூ.1,14,000லிருந்து தொடங்குகிறது.
ஆப்பிள் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில் தனது புதிய மேக்புக் ஏர் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது. கடந்த 2010ல் வெளியிடப்பட்ட மேக்புக் ஏர் அப்போதிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் வெளியாகி வந்தது. இந்தநிலையில் தற்போது புதிய மேக்புக் ஏர் ரெட்டினா டிஸ்பிளே, டச் ஐடி, இமேஜ் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்ச்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.
மேக்புக் ஏர் இந்திய விலை,
புதிய மேக்புக் ஏர் சிறப்பம்சமாக 2133MHz திறன் கொண்ட 8 ஜிபி ரேம் (16ஜிபி வரை), இன்டெல் கோர் ஐ5 பிராஸசர் (1.6GHz பேஸ் கிளாக் உடன் டர்போ 3.6GHz வரை) இன்டெல் யூஎச்டி கிராபிக்ஸ் 617 மற்றும் 128 ஜிபி மெமரி (1.5டிபி வரை). இதன் விலை $1,199 (தோராயமாக ரூ.88,200), நவ.7 முதல் கிடைக்கும் இந்த மேக்புக் ஏர் லேப்டாப்பிற்கு, அமெரிக்காவில் தற்போதே முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதே நாளில் இந்தியாவில் வெளியாகும் இதன் விலையானது ரூ.1,14,900 ஆகும்.
புதிய மேக்புக் ஏர் ஆனது கோல்டு, சில்வர், ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. $1,399 (தோராயமாக ரூ.1,02,900) மாடல் குறித்து மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேக்புக் ஏர் சிறப்பம்சங்கள் மற்றும் குறிப்புகள்
புதிய மேக்புக் ஏர் ஆனது பேக் லைட் கீபோர்ட் கொண்டுள்ளது. இது ஒவ்வொரு பொத்தான்களுக்கும் பின்னால் தனித்தனி லைட் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட பெரிய ஃபோர்ஸ் டச் டிராக்பேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்பிளே (2560x1600 பிக்ஸல்ஸ்) 16:10 அக்சப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. இது 48 சதவீதம் அதிக கலர் தருகிறது. முந்தைய பேசல்கள் 50 சதவீதம் மெல்லிதாக உள்ளது.
இதன் டிஸ்பிளேயில் 720பிக்ஸல்ஸ் பேஸ் டைம் எச்டி கேமிரா உள்ளது. 3.5mm ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது. Wi-Fi 802 11 ஏசி மற்றும் ப்ளூடூத் v4.2 கொண்டுள்ளது. 50.3Wh திறன் கொண்டு ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப் நீடிக்கிறது. முந்தைய மாடலை விட 10 சதவிகிதம் சிறியதாகவும், 15.6 எம்.எம். தடிமனாகவும், 1.25 கிலோ எடை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?