ஆப்பிள் லேப்டாப் போல அம்சமா வந்திருக்கும் Asus Vivobook S 15

Asus Vivobook S 15 OLED ஆனது மைக்ரோசாப்டின் AI சாட்போட்டை விரைவாக அணுகுவதற்கான பிரத்யேக பட்டனை கொண்டுள்ளது.

ஆப்பிள் லேப்டாப் போல அம்சமா வந்திருக்கும் Asus Vivobook S 15
ஹைலைட்ஸ்
  • Asus Vivobook S15 லேப்டாப் இந்தியாவில் நிறுவனத்தின் முதல் Copilot+ PC ஆகு
  • 16ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறத
  • மடிக்கணினி ஒரு அலுமினிய மூடி, எண் விசைகள் மற்றும் 1-மண்டல RGB கொண்ட பின்ன
விளம்பரம்

ASUS நிறுவனம் Vivobook S 16, S 15 மற்றும் S 14 என மூன்று புதிய மாடல் லேப்டாப்களை  இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள தங்களது பிரபலமான Vivobook S சீரிஸ் லேப்டாப்பை புதுப்பித்துள்ளது. இந்த லேப்டாப்கள் அனைத்தும் OLED டிஸ்பிளேயுடன், பளிச்சென்ற வண்ணமயமான நிறங்களை கொண்டிருக்கிறது. பேஸிக் வீடியோ எடிட் போன்ற பொழுதுபோக்கிற்கு சிறந்த லேப்டாப்பாக இருக்கிறது. 

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கோபைலட் + லேப்டாப்பாக Asus Vivobook S 15 உள்ளது. இது மைக்ரோசாப்டின் Copilot+ PC சான்றிதழைக் கொண்ட நிறுவனத்தின் முதல் சாதனமாகும். இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. விண்டோஸ் 11 மற்றும் வரவிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுக்கான சப்போர்ட் இருக்கிறது. 

விலை எவ்வளவு?

இந்தியாவில் Asus Vivobook S 15 OLED (S5507) விலை 1,24,990 ரூபாய்.  16GB RAM+1TB SSD சேமிப்பகத்துடன் அறிமுகமாகி உள்ளது. Flipkart , Asus e-shop, Asus பிரத்தியேக கடைகள் மற்றும் Pegasus கடைகள் வழியாக கிடைக்கிறது.

Asus Vivobook S 15 OLED (2024, Copilot+) விவரம் 

Asus Vivobook S 15 OLED ஆனது Windows 11 Home மூலம்இயங்குகிறது. Microsoft Office Home & Student 2021 உள்ளது. 15-இன்ச் 3K (2,880 x 1,620 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஷட்டர் மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர் திறன்களுடன் 1080p வெப்கேமரைக் கொண்டுள்ளது.

Asus Vivobook S 15 OLED லேப்டாப் Qualcomm Snapdragon X Elite சிப்செட் உடன் Qualcomm AI இன்ஜின், Adreno GPU மற்றும் Qualcomm Hexagon neural processing unit (NPU) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிப்செட் 16GB LPDDR5X ரேம் மற்றும் 1TB NVMe SSD சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அலுமினிய மூடி, நம்பர் கீ மற்றும் RGB கொண்ட கீ போர்டு லைட் உள்ளது. AI PC என்பதால், பிரத்யேக Copilot கீ கொண்டுள்ளது. கூடுதலாக ஹர்மன் கார்டனால் டியூன் செய்யப்பட்ட இன்பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோன் வசதியுடன் வந்துள்ளது. 

Asus Vivobook S 15 OLED லேப்டாப் 3 செல் 70Whr திறன் கொண்ட Li-ion பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை 90W AC அடாப்டரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்ய முடியும். புளூடூத் 5.4 மற்றும் Wi-Fi 7 இணைப்பை வழங்குகிறது. இது இரண்டு USB 3.2 Gen 1 Type-A போர்ட்கள், இரண்டு USB 4.0 Type-C போர்ட்கள், ஒரு HDMI 2.1 போர்ட் மற்றும் ஒரு 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ரீடரையும் கொண்டுள்ளது. 352.6x227x15.9 மிமீ சைஸ்சில் 1.42 கிலோ எடை கொண்டதாக உள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  2. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  3. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  4. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  5. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  6. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  8. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
  9. அறிமுகமாகிறது Oppo K13x 5G: கீழே விழுந்தாலும் உடையாதா? முழு பாதுகாப்பு அம்சங்கள் வெளியானது!
  10. Nothing Phone 3 இந்தியாவில் உருவாகிறது - மாடல் நம்பர் A024 உடன் கிளிஃப் இன்டர்பேஸ் மாற்றம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »