Photo Credit: Google, Paul Hebert/AMPAS
அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போல, யூடியூப் தனது முதல், ஒரிஜினல் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இசைத் திறன்களை கண்டறிந்து போட்டி நடத்தும் ARRived என்ற நிகழ்ச்சியை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் நடக்கும். இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு மாதத்துக்குள் வெளி வர இருக்கிறது.
இந்தியாவில் யூடியூப் ஒரிஜினல்ஸ் என்ற லேபிலில் யூடியூப் வெளியிட இருக்கும் முதல் நிகழ்ச்சி இது. மற்ற யூடியூப் வீடியோக்கள் போலவே, இந்த ஒரிஜினல்ஸில் வரும் விடீயோக்களிலும், விளம்பரங்களை, வருவாய் மூலமாக வைத்துள்ளது யூடியூப்.
ARRived தான் இந்தியாவில் கூகுளின் முதல் யூடியூப் ஒரிஜினல்ஸ் நிகழ்ச்சி என்றாலும், முன்னதாக சோதனை முயற்சியாக, 2 நிகழ்ச்சிகளை வெளியிட்டுள்ளது. பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற கிரிக்கெட் டாக் ஷோவும், வாட் தி டக் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியும் வெளியாகியிருக்கிறது.
யூடியூப் ஒரிஜினல்ஸ் இப்போது அமேசான் பிரைம், நெட்ஃபிள்க்ஸ், ஹாட்ஸ்டார், வூட், ஈரோஸ் நவ் ஹூக், யப் டி.வி போன்ற ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவங்கனங்களுடன் ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்க இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல், விளம்பரங்கள் இன்றி வீடியோ பார்க்க அனுமதிக்கும் யூடியூப் பிரைம் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், யூடியூப் இந்தியாவின் பொழுதுபோக்கு துறை தலைவர் சத்யா ராகவன் தெரிவித்துள்ளார். இந்த பிரைம் சேவை தற்போது 21 நாடுகளில் இருக்கிறது. 12 டாலர்களை வரை சந்தா வசூலிக்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்