ஓலா நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றும் பல வாடிக்கையாளர்களால் ஓலா கேப்களை பயன்படுத்த முடிகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் டாக்ஸி சேவைக்கான உரிமத்தை ஓலா (OLA) 2021 ஜூன் வரை பெற்றுள்ளதாக தகவல்.
இந்தியாவின் முன்னணி கால் டாக்சி சேவை வழங்கும் நிறுவனமான 'ஓலா கேப்ஸ்'க்கு 6 மாதம் தடை விதித்துள்ளது கர்நாடக அரசு. மாநில அரசின் விதிமுறைகளை மீறியதால் ஓலா நிறுவனத்திற்கு இந்தத் தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
'தெடர்ந்து பல முறை எச்சரிக்கை விடுத்த பிறகும், ஓலா நிறுவனம் எங்களது சரிவர பதிலளிக்கவில்லை. நாங்கள் வழங்கிய அனுமதியை மீறி செயல்பட்டு கொண்டிருந்தது. கர்நாடக அரசு தனது கொள்களைகளில் 'பைக் டாக்சி' பயன்பாட்டை எதிர்க்கிறது.
இந்த உத்தரவை ஓலா நிறுவனம், தொடர்ந்து மீறி வந்ததால் உடனடியாக அந்நிறுவனத்திற்கு 6 மாதம் தடை விதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது' என கார்நாடக அரசு போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஓலா நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மாநிலத்தின் சில இடங்களில் ஓலா சேவையை பலரால் பயன்படுத்த முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாப்ட் வங்கி க்ரூப் கார்ப் மற்றும் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சார்பில் இயங்கும் ஓலா, கர்நாடகாவில் டாக்ஸி சேவைக்கான உரிமத்தை 2016 ஜூன் முதல் 2021 ஜூன் வரை பெற்றுள்ளதாக தகவல்.
'மற்ற சில நிறுவனங்கள் போலன்றி நாங்கள் எங்களது பைக் டாக்ஸி சேவையை அரசின் உத்தரவின்படி பல வாரங்களுக்கு முன்னரே நிறுத்தி விட்டோம். மேலும் அது ஒரு புதிய திட்டமில்லை வெறும் சோதனை ஓட்டம் மட்டுமே. சீக்கிரமே இது குறித்து ஒரு சுமூக தீர்வு எடுக்கப்படும்' என ஓலா தெரிவித்துள்ளது.
ராப்பிடோ, எனப்படும் மற்றோரு மோட்டர் சைக்கிள் டாக்ஸி நிறுவனம் பெங்களுரூ மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராப்பிடோ நிறுவனம் என்ன உரிமம் பெற்று கர்நாடகாவில் செயல்பட்டு வருகிறது என்பது இன்னும் அறியப்படாமல் இருக்கிறது.
ஓலா நிறுவனம் சுமார் 100 மில்லியன் டாலர் வரை வோகோ என்னும் மோட்டார் சைக்கிள் டாக்ஸி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மீது முதலீடு செய்யதுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28