குருகிராம் நகரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்தத் திட்டம் இந்தியாவின் 10 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.
Photo Credit: சோமேட்டோ
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் மட்டுமே உணவை வழங்க உள்ளனர்.
சோமேட்டோ உணவு டெலவரி நிறுவனத்தின் டெலவரி எக்சிக்கியூடிவ் ஒருவர், வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற உணவை எடுத்து உண்ணும் வீடியோ ஆன்லைனில் வைரலானது.
இந்த வீடியோ காட்சி ஆன்லைன் உணவு வாங்குபவர்கள் மற்றும் பொது மக்களிடேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சோமேட்டோ நிறுவனம் இதுபோன்ற பிரச்னைகள் இனி வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருந்தது.
அதையொட்டி தற்போது சோமேட்டோ நிறுவனம், சாப்பாடு பொட்டலங்களை திறக்க முடியாத வகையில் ஒரு புதிய பேக்கிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் இந்தப் புதிய பேங்கிங் முறை பாலிமரால் செய்யப்பட்ட ஒரு திரையைக் கொண்டுள்ளது. இரண்டு விதமாக வெளியாகியுள்ள இந்தப் புதிய பேக்கிங் கவர் சிறு மற்றும் பெரிய உணவு பார்சல்களை பாதுகாப்பாக மூட உதவுகிறது.
டெலிவரி நபரிடம் உணவைத் தருவதற்கு முன்னர் உணவகத்தில் வைத்து இந்தப் புதிய பேக்கிங் செய்யப்படுகிறது. இந்த சீலை வாடிக்கையாளர் கிழித்த பின்னர்தான் உணவைச் சாப்பிட முடியும். இதனால் டெலிவரி நபர்கள் பார்சல்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சோமேட்டோ நிறுவனம், உணவுப் பொட்டலங்கள் திறந்து காணப்பட்டால் உடனடியாக தங்களுக்குப் புகார் அளிக்கும்படி வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குருகிராம் நகரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்தத் திட்டம் இந்தியாவின் 10 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஜெய்ப்பூர், சண்டிகர், நாக்பூர் மற்றும் வடோதரா போன்ற நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்தக்கட்டமாக சோமேட்டோ டெலிவரி இயங்கும் 180 நகரங்களிலும் இந்தப் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் மட்டுமே உணவை வழங்க உள்ளனர். இதன் மூலம் 100% உணவுப் பாதுகாப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என சோமேட்டோ தெரிவித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications