'அதைக் கூட்டி... இதைக் கழித்து...'- நெட்ஃப்ளிக்ஸின் 'அடடே' கணக்கு விளம்பரம்...!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 7 ஆகஸ்ட் 2019 17:52 IST

உலக பிரபலமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது இண்ஸ்டாகிராமில் ஹைபர் ஆக்டிவாக உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு நண்பர்கள் தினத்தன்று ஒரு மீம் பகிர்ந்திருந்தனர் நெட்பிளிக்ஸ்.

‘யாரென்றே தெரியாமல் முகமறியாதவருடைய நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் உபயோகிப்பவர்களே, அந்த முகமறியாத நண்பருக்கு ஹாப்பி ப்ரெண்ட்ஷிப் டே கூறுங்கள்' என இருந்தது. அது செம வைரல் ஆகியது.

தற்போது பிரபலமான படங்கள் மற்றும் சீரிஸ்களை வைத்து ஓர் கணக்கு புதிரை பதிவித்துள்ளது நெட்பிளிக்ஸ்.

((Shades of Grey) + (Days Sartaj has to save the city in season 1) X (Number of friends in Friends) + (Frontier in Triple frontier) - (Number of idiots in the movie where “Aal Izz Well'))- 1 = ? என்பதே அந்த கணக்கு.

சம்பந்தமே இல்லாமல் ஏன் இப்படி ஒன்றை நெட்பிளிக்ஸ் பதிவிட்டது என நீங்கள் கேட்டால், இது நெட்பிளிக்ஸ் தங்களுக்கு தாங்களே செய்து கொள்ளும் விளம்பரமாகும். ஆம். எப்படி என கேட்கிறீர்களா?

Shades of Grey – பிரபலமான புத்தகம்/படமான இதன் முழு பெயர் '50 Shades of grey'. அதன் மூலம் இதற்கான பதில் 50.

Days Sartaj has to save the city in season 1 – ஆகஸ்ட் 15 பிரபல சீரிஸான சாக்ரட் கேப்ஸின் இரண்டாம் சீசன் வருகிறது. அதன் முதல் சீசனில் சிட்டியை காப்பாற்ற சர்தஜிடம் 25 நாட்கள் மட்டுமே இருக்கும். இதற்கான பதில் 25

Number of friends in Friends – அதிரிபுதிரி ஹிட்டான ப்ரெண்ட்ஸ் சீரிஸில் வரும் நண்பர்கள் ரசேல், மோனிக்கா, போபி, ஜோய், சண்ட்லர், ரோஸ் என ஆறு பேர் ஆவார்கள். இதற்கான பதில் ஆறு.

Advertisement

Frontier in Triple frontier – மூன்று.

Number of idiots in the movie where “Aal Izz Well' – 3 இடியட்ஸ் / நண்பன் படத்தில் இருக்கும் கதாநாயகர்களின் எண்ணிக்கை மூன்று. இதற்கான பதில் மூன்று.

இதனை அந்த கணக்கில் போட்டு பார்த்தால் , ((50) + (25) X (6) + (3) – (3)) – 1 = 199.

Advertisement

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு என பிரத்யேக பிளான் ஒன்றை அறிமுகம் செய்தது. மொபைலில் மட்டும் நெட்பிளிக்ஸ் உபயோகிக்க 199 ரூபாய் பிளான் தான் அது.

அதற்கான விளம்பரத்தை தான் இப்படி கணக்கு மூலம் பதிவித்துள்ளனர் நெட்பிளிக்ஸ்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Netflix, Netflix plan prices, Netflix plans
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  2. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  3. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  4. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  5. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  6. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
  7. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  8. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  9. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  10. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.