ரிலையன்ஸ் நிறுவனங்களின் 42வது ஆண்டு பொது சந்திப்பில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள்!
ஜியோ ஜிகாபைபர் சேவைகள் அறிவிக்கப்பட்டன
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ சேவை 331.1 மில்லியன் வாடிக்கையாளர்களை எட்டியுள்ளதாக இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனங்களின் 42வது ஆண்டு பொது சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீயோ இந்தியாவில் 340 மில்லியன் சந்தாதாரர்களை தாண்டி, உலகின் அதிவேகமான வளரும் டிஜிட்டல் சேவையாக மாறியுள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். மேலும் பேசுகையில், இந்த தொலைதொடர்பு செப்டம்பர் 5-ல் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளது. என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜியோ ஒவ்வொரு மாதத்திற்கும் 10 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பெருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் ஜியோ ஜிகாபைபர், ஜியோ போன் 3 குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஜியோ ஜிகாபைபர் பற்றி அம்பானி பேசுகையில், இது வரை இந்த ப்ராட்பேண்ட் சேவை 15 மில்லியன் முன்பதிவுகளை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு இந்த சேவை 1,100 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த சேவை 1,600 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படவுள்ளது. இந்த 1,600 நகரங்களில் 20 மில்லியன் வீட்டு சேவைகளையும், 15 மில்லியன் தொழில் சேவைகளையும் எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு 700 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை சேவை விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும், ஒவ்வொரு தேவைக்கும், ஒவ்வொரு பிரிவிற்கும் பொருந்தும் வகையில்' அறிமுகமாகியுள்ளது என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது 100Mbps வேகத்தில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை, விரைவில் 1Gbps வேகம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, இந்த ஜியோ ஜிகாபைபர் சேவைக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். அவற்றில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்த ஜியோ பைபரை ஆண்டு சந்தாவில் பெறுபவர்களுக்கு HD LED அல்லது 4K டிவிக்களை இலவசமாக வழங்கவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
நிலையான சர்வதேச தொலைப்பேசி அழைப்பைப் பொறுத்தவரை, அம்பானி "சர்வதேச அழைப்பிற்கான மிகக் குறைந்த நிலையான வரி விகிதங்களை" அறிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான அழைப்புகளுக்கான வரம்பற்ற சர்வதேச அழைப்புப் பொதியும் ரூ. 500.
ரிலையன்ஸ் ஜியோவின் ஸ்மார்ட் அம்ச மொபைல்போன்களின் வரிசைதான் இந்த ஜியோ போன் தொடர். இந்தத் தொடரில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு சாதனங்கள் பெரிய கேஷ்பேக் சலுகைகளுடன் விற்கப்பட்டன, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனத்தைத் திருப்பித் தந்தாலும் ஸ்மார்ட்போனின் முழு விலை வழங்கப்படும் என்றெல்லாம் சலுகை அறிவிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக ஜியோ போன் 3 பற்றி இப்போது எந்த விவரங்களும் இல்லை, ஜியோ தொலைபேசி 3 ஜியோ தொலைபேசி 2-ஐ விட சக்திவாய்ந்ததாக இருக்கலாம் மற்றும் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் பேஸ்புக் முன்பே இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped