ஃப்ளிப்கார்ட்டின் 'ஃப்ளிப்ஸ்டார்ட் டேஸ்': சிறந்த சலுகைகளுடன் உங்கள் மாதத்தை துவங்குங்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஃப்ளிப்கார்ட்டின் 'ஃப்ளிப்ஸ்டார்ட் டேஸ்': சிறந்த சலுகைகளுடன் உங்கள் மாதத்தை துவங்குங்கள்!

ஃப்ளிப்கார்ட்டின் 'ஃப்ளிப்ஸ்டார்ட் டேஸ்'!

ஹைலைட்ஸ்
 • 'ஃப்ளிப்ஸ்டார்ட் டேஸ்', ஜூன் மாதம் 1-ஆம் தேதி துவங்கவுள்ளது.
 • 80 சதவிகிதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி.
 • ஆக்சிஸ் வங்கியின் கார்டுகளுக்கு 10 சதவிகித தள்ளுபடி

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களை சலுகை நாட்களிலேயே மூழ்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த மே மாதத்தில் மட்டுமே மூன்று சலுகை விற்பனைகளை அறிவித்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த மூன்று விற்பனையிலும் மொபைல்போன்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கியிருந்தது. மற்ற பொருட்களுக்கும் சலுகைகளை வழங்கியிருந்தாலும், மொபைல்போன்களுக்கான சலுகை என்பதே முதன்மையாக இருந்தது. மே மாதத்தின் சலுகைகள் இப்படி இருக்க, ஜூன் மாதத்தின் துவக்கத்திலேயே ஒரு சலுகை விற்பனையை அறிவித்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இந்த விற்பனையில், மின்னணு சாதனுங்களுக்கென பிரத்யேகமாக இந்த சலுகை விற்பனை அறிவித்துள்ளது. ஃப்ளிப்கார்ட்டின் சிறந்த சலுகைகளுடன் சிறந்த சலுகைகளுடன் இந்த மாதத்தை துவங்குங்கள்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள இந்த  'ஃப்ளிப்ஸ்டார்ட் டேஸ்', ஜூன் மாதம் 1-ஆம் தேதி துவங்கவுள்ளது. ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கவுள்ள இந்த விற்பனையில் மின்னணு சாதனங்கள் முதல் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள் வரை அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி அறிவித்துள்ளது. 80 சதவிகிதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கியுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், ஆக்சிஸ் வங்கியின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை பெறுபவர்களுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் நடத்தும் மூன்றாவது 'ஃப்ளிப்ஸ்டார்ட் டேஸ்' விற்பனை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விற்பனையில் அதிகபட்சமாக மின்னணு சாதனங்களூக்கு 80 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. குறிப்பிடத்தக்கதாக சோனி, ஜே.பி.எல் போன்ற முன்னனி நிறுவனங்களில் ஹெட்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு, 70 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. எச்.பி, ஏசர் பொன்ற முன்னனி நிறுவனங்களுக்கும் சலுகைகளை வழங்கியுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் லேப்டாப்கள் 12,990 ரூபாய் முதலிலிருந்தே கிடைக்கும். மேலும், முன்னனி நிறுவனங்களின் பவர் பேன்க்-களுக்கும் சிறந்த சலுகைகளை அறிவித்துள்ள ஃப்ளிப்கார்ட், அனைத்து விதமான மொபைல்களுக்குமான கவர்களை 99 ரூபாயிலிருந்தே விற்பனை செய்யவுள்ளது. இந்த விற்பனையில், பொருட்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்கவுள்ளது.

டிவி பொருட்களுக்கு 75 சதவிதம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ள இந்த விற்பனையில், 32-இன்ச் வ்யூ ஸ்மார்ட் டிவியின் துவக்க விலை 12,499 ரூபாய் மட்டுமே. ஏ.சி மற்றும் ஃப்ரிட்ஜ்களுக்கு 50 சதவிகிதம் வரை இந்த விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மிக்சி மற்றும் கிரைண்டர்களும் சலுகைகளை பெற்றுள்ள இந்த விற்பனையில் பிரஸ்டீஜின் மிக்சிக்கள் 999 ரூபாய் விலையிலிருந்தே துவங்குகிறது. 

மின்னணு சாதனங்கள் மட்டுமின்றி, வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பர்னிச்சர்களுக்கு 30 முதல் 75 சதவிகிதம் வரையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடைகள் மற்றும் ஃபேஷன் பொருட்களுக்கு 80 சதவிகிதம் வரையில் தள்ளுபடி வழங்கியுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 2. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 3. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
 4. Realme 7 ஸ்மார்ட்போனின் விற்பனை முடிந்தது! அடுத்த விற்பனை செப்.17!!
 5. 49 ரூபாய்க்கு BSNL புதிய பிளான் அறிமுகம்! தினமும் 2ஜிபி டேட்டா!!
 6. மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்! விவரங்கள் கசிந்தன
 7. பட்ஜெட் விலையில் Redmi 9i ஸ்மார்ட்போன்.. செப்.15 அறிமுகம்!
 8. கலக்கலான டிஸ்பிளேவுடன் Redmi Smart Band அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 9. Vodafone Idea முழுமையாக இணைந்தது.. புதிதாக ‘Vi’ லோகோ அறிமுகம்
 10. வருகிறது ரியல்மியின் புத்தம் புதிய ஸ்மார்ட்கேம், ஸ்மார்ட் பல்பு!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com