இந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ. நடத்திய பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளின் வினாத்தாள்கள், தேர்வு நடைப்பெறுவதற்கு முன்னரே வெளியில் கசிந்தது. இதனால், சி.பி.எஸ்.இ.க்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டங்கள் எழுந்தன.
இந்த சம்பவம் நடைப்பெற்று மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து, பாதுகாப்பு தொழிநுட்பத்துடன் கூடிய வெளியில் கசியாத டிஜிட்டல் கேள்வி தாள்களை சி.பி.எஸ்.இ தயாரித்து உள்ளது
“சி.பி.எஸ்.இ நடத்தும் தேர்வுகளின் கேள்வித் தாள்கள், தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் வரை, வெளியில் கசியாத வகையில் புதிய அம்சங்களுடன் பாதுகாக்கப்பட உள்ளது. மேலும், இந்த பாதுகாப்பு முறை வெற்றிகரமான சோதனையை நிறைவு செய்துள்ளது” என்று மைக்ரோசாப்ட் இந்தியாவின் முதன்மை இயக்குனர் அனில் பன்சாலி தெரிவித்துள்ளார்
விண்டோஸ் 10, ஆபீஸ் 365 தொழில்நுட்பத்தில் செயலாற்ற கூடிய இந்த புதிய முறையில், தேர்வு தொடங்கும் 30 நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், ஓடிபி அல்லது முக்கிய பாதுகாப்பு கடவுச்சொல் செலுத்திய பின்பே, வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இதனால், வினாத்தாள் வெளியில் கசிவதை தடுக்கலாம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்