அமேசான் தனது வணிகத்தை அளவிடுவதற்கும் உள்ளூர் கடைகளிலிருந்து நேரடியாக பொருட்களை விற்பனை செய்வதற்கும் இந்தியாவில் 'Local Shops on Amazon' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேசான், இந்தியாவில் புதிய திட்டத்தை அதிகரிக்க 10 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.
இந்தியாவில் 'Local Shops on Amazon' என்ற திட்டத்தை Amazon India அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அமேசான் தனது வணிகத்தை விரிவுபடுத்தி உள்ளூர் கடைக்காரர்களுடன் இணைத்துள்ளது. அமேசானின் இந்த நடவடிக்கை ரிலையன்ஸ் சில்லறை நிறுவனத்தின் ஜியோமார்ட் மற்றும் Flipkart-க்கு கடும் சவாலாக இருக்கும்.
நிறுவனம் கடந்த 6 மாதங்களாக 5,000-க்கும் மேற்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுடன் இந்த பைலட் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. கூடுதலாக, அமேசான் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய சிறிய-உள்ளூர் கடைக்காரர்களை அழைத்துள்ளது. இந்த திட்டத்தில் நிறுவனம் 10 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.
Amazon இந்த புதிய திட்டம் மூலம், வாடிக்கையாளர்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது மற்றும் ஆஃப்லைன் கடைக்காரர்களுக்கு அளவிடக்கூடிய தன்மையை வழங்குகிறது. அஹமதாபாத், கோயம்புத்தூர், டெல்லி, ஃபரிதாபாத், ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, புனே, சஹரன்பூர், மற்றும் சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விற்பனையாளர்களுடன் நிறுவனம் ஏற்கனவே கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த திட்டம் உள்ளூர் மளிகை கடை மற்றும் மின்சார கடைக்கு மட்டுமல்ல. உண்மையில், இந்நிறுவனம் நாட்டின் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் வாகன விற்பனையாளர்கள், புத்தகங்கள், ஃபர்னீச்சர், வீட்டு அலங்காரங்கள், வீட்டு உபகரணங்கள், விளையாட்டு மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பிற விற்பனையாளர்களையும் இணைத்துள்ளது.
அமேசானின் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள், ஒரு நாள் அல்லது அடுத்த நாளுக்குள் பொருட்களை வழங்குவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது அமேசான் அதன் விநியோக நிர்வாகிகளின் சுமையை குறைக்க உதவும்
இது தவிர, ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட 'Amazon Delivery app' வழங்கப்படும். இதன் உதவியுடன் அவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு தயாரிப்பு விநியோகத்தைப் அப்டேட்டை வழங்கவும், தினசரி அடிப்படையில் அவர்களின் ஏற்றுமதிகளைக் கண்காணிக்கவும் உதவும்.
நிச்சயமாக, அமேசான் திட்டத்தில் அமேசானின் உள்ளூர் கடை நிறுவனத்திற்கு லாபகரமானதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை விதித்துள்ளது, இதன் காரணமாக அமேசான் மற்றும் அதன் போட்டியாளரான பிளிப்கார்ட் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வழங்க முடியவில்லை. இருப்பினும், இப்போது உள்ளூர் கடை திட்டம் அமேசான் இந்த சிக்கலை சமாளிக்க உதவும்.
உள்ளூர் விற்பனையாளர்கள் அமேசான் இந்தியாவின் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மாறலாம். இணையதளத்தில் இந்த திட்டத்திற்காக ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது, இது முயற்சியில் சேர கூடுதல் கட்டணம் ஏதும் இருக்காது என்று கூறுகிறது. ஆன்லைன் தளங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நிலையான கட்டணங்கள் உள்ளூர் கடை விற்பனையாளர்களுக்கு பொருந்தும்.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Redeem Codes (September 2026): How to Claim Bloodline Awakening Redeem Codes