ரூ.2000லிருந்து ரூ.4,999 வரை பொருட்கள் வாங்குபவர்களுகு 5 சதவீத கேஷ் பேக் மற்றும் ரூ.5000 மேல் பொருட்கள் வாங்குபவர்கள் 10 சதவீத கேஷ் பேக் வழங்கப்படுகிறது
அமேசான் ஹெ.டி.ஃஎப்.சி வங்கியுடன் இணைந்து 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.
பிளிப்கார்ட் தங்களது விழாக்கால விற்பனை தேதி அறிவித்திருக்கும் நிலையில் அமேசானும் தங்களுடைய கிரேட் இந்தியன் சேல் நவ.2 லிருந்து நவ.5 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அமேசான் ஹெ.டி.ஃஎப்.சி வங்கியுடன் இணைந்து டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு லாபகரமான இ.எம்.ஐ-யுடன் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.
ரூ.2000லிருந்து ரூ.4,999 வரை பொருட்கள் வாங்குபவர்களுகு 5 சதவீத கேஷ் பேக் மற்றும் ரூ.5000 மேல் பொருட்கள் வாங்குபவர்கள் 10 சதவீத கேஷ் பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ் பேக் அமேசான் பே-யில் ஏற்றப்படும். இந்த விற்பனையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது நவ.1ல் துவங்கும் ஒன்பிளஸ் 6டியின் விற்பனையாகும்.
அமேசானில் முதல் முறையாக பொருட்கள் வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா இ.எம்.ஐ மற்றும் இலவச டெலிவரி செய்து கொடுக்கப்படுகிறது. ரூ.500க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு புக் மை ஷோ, ஸ்விகி கூப்பன்கள் மற்றும் அமேசான் பே பேலன்ஸ்- களையும் வழங்குகிறது.
ரெட்மி 6 ப்ரோ சாம்சங் கேலக்ஸி ஏ8+ மற்றும் ரியல்மி 1 ஸ்மார்ட்போன்கள் லாபகரமான தள்ளுபடி விலையில் கிடைக்கும். லேப் டாப்பிற்கு 25,000 தள்ளுபடி, கேமிரா மற்றும் ஆடியோ சாதனங்களுக்கு 70 சதவீத தள்ளுபடி, ஹெட்போன்கள் விலை ரூ.249லிருந்து துவங்கும். மிகக்குறைந்த விலையில் 1டிபி ஹார்ட் டிரைவ் ரூ.3,299 கிடைக்கும்.
எம்.ஐ 49 இன்ச் டிவி கிரேட் இந்தியன் சேலின் போது தினமும் காலை 11 மணிக்கு விற்பனையை தொடங்கும். பேஷன், ஹோம் மற்றும் கிச்சன் பொருட்களுக்கு 80 சதவீத தள்ளுபடி. மேலும் அமேசான் நிறுவன பொருட்களான எக்கோ ரேன்ஜ், ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் கிண்டல் இ-வாசிப்பாளர்களுக்கு 3,500 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
அமேசான் கிரேட் இந்தியன் சேலில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒன்பிளஸ், ஹானர், ஜியோமி, சாம்சங், ரியல்மி, ஹூவாய், விவோ, மோட்ரோலா மற்றும் மேலும் பல நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தேச பாதுகாப்பு, ஒருமுறை இலவச திரை மாற்றம் செய்து கொடுக்கப்படுகிறது. ஆஃபர் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp for iOS Finally Begins Testing Multi-Account Support With Seamless Switching