Amazon Great Indian Festival Sale 2024 சலுகை தொடங்கிடுச்சே!

Amazon Great Indian Festival Sale 2024 சலுகை தொடங்கிடுச்சே!

Photo Credit: Amazon

Amazon's Great Indian Festival sale kicks off alongside Flipkart's Big Billion Days sale

ஹைலைட்ஸ்
  • Prime members இப்போதே சலுகைகளை பெறலாம்
  • Apple iPhone 13 இப்போது ரூ. 41,180 விலையில் கிடைக்கிறது
  • அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 27 சலுகை ஆரம்பமாகிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Indian Festival 2024 பற்றி தான்.


இந்தியாவில் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. Amazon Great Indian Festival இப்போது அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்காக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அமேசான் பிளாட்ஃபார்மில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களை விட ஒரு நாள் முன்னதாக பிளாட்ஃபார்மில் பிரைம் சந்தா வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறலாம். செப்டம்பர் 27 அதிகாரப்பூர்வமாக Amazon Great Indian Festival 2024 தொடங்குகிறது. Prime members இப்போதே சலுகைகளை பெறலாம்.


எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதற்காக அறியப்பட்ட இந்த விற்பனை இந்தியாவின் பண்டிகைக் காலத்தின் பிரதான அம்சமாக மாறியுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்கள், உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பலவற்றின் சலுகைகள் இடம்பெறும். 9,500 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்படுகிறது.


வாடிக்கையாளர்கள் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு தயாரிப்புகளில் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம் அல்லது பழைய தயாரிப்புகளை பரிமாறிக் கொள்ளலாம். Amazon போட்டியாளரான Flipkart Big Billion Days விற்பனையும் தொடங்கி உள்ளது. ஆனால் Flipkart Plus உறுப்பினர்களுக்கு மட்டுமே இப்போது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டும் வியாழன் (செப்டம்பர் 27) நள்ளிரவில் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் தளங்களில் தள்ளுபடிகளை அணுக அனுமதிக்கும்.


Apple's iPhone 13 ரூ 41,180 என்கிற விலையில் கிடைக்கிறது. அசல் விலை ரூ. 59,900.
Honor 200 5G விலை ரூ. 29,999 என உள்ளது. அசல் விலை ரூ.34,999.
Samsung Galaxy S23 Ultra 5G இப்போது ரூ. 74,999 விலைக்கு கிடைக்கிறது.
இது ஆரம்பத்தில் ரூ. 1,44,999 விலையில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் அமேசானில் ரூ. 84,999 விலையில் பட்டியலிடப்பட்டது.


இதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ரூ. 15,999 விலைக்கு கிடைக்கிறது. அசல் விலை ரூ. 19,999.
சாம்சங் Galaxy M15 5G ஐ விலை ரூ. 10,999க்கு கிடைக்கிறது. அசல் விலை ரூ 15,999.

அமேசான் ஐபாட் (10வது தலைமுறை, 64 ஜிபி) ரூ. 29,999 விலைக்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.34,900.
Samsung Galaxy Tab S9 FE மாடல் ரூ. 26,999 விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 34,900.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Realme C75 5G எல்லோரும் வாங்கும் விலையில் வரும் தரமான 5G செல்போன்
  2. Motorola Razr 60 Ultra செல்போன் Moto AI Suite உடன் இந்தியாவில் வருவது உறுதி
  3. Motorola Edge 60s அசத்தலான வடிவமைப்பில் விற்பனைக்கு வருகிறது
  4. Honor 400 ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் விற்பனைக்கு வருகிறது
  5. Amazon Great Summer Sale 2025 விற்பனை Mid-Range Smartphonesக்கு சிறப்பு சலுகை
  6. Amazon Great Summer Sale 2025 விற்பனை Premium Smartphonesக்கு சிறப்பு சலுகை
  7. Motorola Edge 60 Pro இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகளை பார்க்கலாம்
  8. Amazon Great Summer Sale 2025 அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு ஆரம்பம்
  9. Vivo Y300 GT வெளியீட்டு தேதி அறிவிப்பு: வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியாகின
  10. iQOO Z10 Turbo மற்றும் iQOO Z10 Turbo Pro செல்போன் Snapdragon 8s Gen 4 சிப்செட் உடன் வருகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »