இன்று துவங்கியுள்ள இந்த 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' சேல் வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' சேல் வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அமேசான் நிறுவனம் சார்பில் பல வகை தள்ளுபடி சேல்கள் நடப்பது வழக்கம். அதுபோல் 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' என்ற பெயரில் போன்களுக்கான தள்ளுபடியை கொண்ட ஒரு புதிய சேலை அறிமுகம் செய்துள்ளது அமேசான்.
மேலும் இந்த சேலில் போன்கள் மட்டுமின்றி ஹெட்போன்ஸ், பவர்பேங்க் மற்றும் மொபைல் கேஸ்கள் தள்ளுபடி சேலில் விற்பனை செய்யப்பட உள்ளன. இன்று துவங்கியுள்ள இந்த 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' சேல் வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இத்துடன் வங்கிகளின் தள்ளுபடி மற்றும் கூடுதல் கட்டணமில்லா தவணைத் திட்டம் போன்ற பல வசதிகள் இந்த ஆஃபருடன் இடம் பெற்றுள்ளன. இந்த சேலில் ரியல்மி U1 ஸ்மார்ட்போன் ரூ.2,000 தள்ளுபடி பெற்று ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகறிது. 3ஜிபி ரேம் வகை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் மற்றும் பல வசதிகளுடன் வெளியாகிறது.
இந்த ஆண்டு அறிமுகமான ஹூவாய் Y9 (2019) ஸ்மார்ட்போன் இந்த சேல் மூலம் ரூ.1000 தள்ளுபடி பெற்று தற்போது ரூ.14,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வங்கிகளின் தள்ளுபடி மற்றும் கூடுதல் கட்டணமில்லா தவனைத் திட்டம் போன்ற பல வசதிகளையும் போன் வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ரூ.13,050 வரை இந்த போனுக்கு எக்ஸ்சேஞ்ச் விலை பெற முடிகிறது. அமேசான் வழங்கும் இந்த 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' சேலில் விவோ Y83 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிகபடியான தள்ளுபடியைப் பெற்றுள்ளது. இந்த போனின் அசல் விலையான ரூ.15,990யில் இருந்து குறைந்து தற்போது ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட போன்கள் எல்லாம் பட்ஜெட் தயாரிப்புகளாக இருக்க, இந்த சேலில் ஓன்ப்ளஸ் 6T, சியோமி எம்ஐ A2 மற்றும் ஓப்போ எஃப் 11 ப்ரோ போன்ற பல தயாரிப்புகள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுடன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S27 Ultra Tipped to Launch With a Custom Snapdragon 8 Elite Series Chip