"இது உங்களுக்கு கண்டிப்பா யூஸ் ஆகும்...." - WhatsApp Groups பற்றிய முக்கிய அப்டேட்!

அந்நியர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ப்பதை எவ்வாறு தடுப்பது என்று யோசிக்கிறீர்களா? எப்படி என்பதை இங்கே பார்க்கவும்

ஹைலைட்ஸ்
  • உங்களை WhatsApp Groups-ல் சேர்ப்பதை இப்போது தடுக்கலாம்
  • இப்போது வரை அந்நியர்கள் உங்களை WhatsApp Groups-ல் சேர்க்கலாம்
  • உங்களை Group-ல் சேர்க்க உங்கள் தொடர்புகள் மட்டுமே அனுமதிக்க முடியும்
விளம்பரம்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அல்லது ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு வாட்ஸ்அப் குழுக்கள் (WhatsApp Groups) சிறந்தவை. இருப்பினும், உங்கள் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் உங்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்கலாம், இது விரைவில் உங்களை எரிச்சலூட்டும். ஒரு குழுவில் சேர உங்களை அழைக்கும் இணைப்பை அனுப்பும் திறன் போன்ற வாட்ஸ்அப்பில் நல்ல அம்சங்கள் இருக்கும்போது, ​​நீங்கள் சேர விரும்பாத குழுக்களில் உங்களைத் தோராயமாகச் சேர்க்க ஏன் மக்களை அனுமதிக்க வேண்டும்? இந்த எரிச்சல் இப்போது சரி செய்யப்பட்டது, மற்றவர்கள் உங்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ப்பதை இப்போது தடுக்கலாம்.

வாட்ஸ்அப்பில் புதிய குழு தனியுரிமை அமைப்புகள் (group privacy settings) Android மற்றும் iPhone இரண்டிலும் கிடைக்கின்றன. உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த அமைப்புகளை எவ்வாறு இயக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.


உங்கள் ஸ்மார்ட்போனில் Group Privacy Settings-ஐ எவ்வாறு இயக்குவது?

உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த அமைப்புகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வதற்கு முன், உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை இண்ஸ்டால் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை பதிப்பு எண் 2.19.308 மற்றும் ஐபோனின் பதிப்பு எண் 2.19.112 ஆகும். Android-க்கான Google Play Store மற்றும் iPhone-க்கான App Store இரண்டிலும் அந்தந்த வாட்ஸ்அப் பக்கங்களுக்குச் சென்று புதுப்பிக்கலாம். அதோடு, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.


Android-ல் வாட்ஸ்அப் குழுக்களில் யாரோ ஒருவர் உங்களைச் சேர்ப்பதை எப்படி தடுப்பது?

நீங்கள் Android பயனராக இருந்தால், அனுமதியின்றி உங்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ப்பதைத் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

  1. உங்கள் Android ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறந்து, மேல் வலதுபுறத்தில் உள்ள vertical three-dots icon-னைத் தட்டவும்.
  2. பிறகு, Settings > Account > Privacy-யைத் தட்டவும்.
  3. இப்போது Groups-ஐ தட்டவும், கொடுக்கப்பட்ட மூன்று விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் - Everyone, My Contacts* அல்லது My Contacts Except **.
  4. நீங்கள் 'Everyone'-ஐத் தேர்ந்தெடுத்தால், யார் வேண்டுமானாலும் உங்களை குழுக்களில் சேர்க்கலாம்.
  5. My Contacts-ஐத் தேர்ந்தெடுப்பது உங்கள் தொடர்புகள், உங்களை WhatsApp Groups-ல் சேர்க்க மட்டுமே அனுமதிக்கிறது.
  6. இறுதியாக, 'My Contacts Except' என்ற மூன்றாவது ஆப்ஷன், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே உங்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்க அனுமதிக்கிறது. நீங்கள் select contacts one by one அல்லது மேல் வலதுபுறத்தில் உள்ள Select All icon-னைத் தட்டுவதன் மூலம் எல்லா தொடர்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். private chat மூலம் குழு அழைப்பை (group invite) உங்களுக்கு அனுப்ப இந்த நபர்கள் கேட்கப்படுவார்கள். குழுவில் காலாவதியாகும் முன், அதில் சேருவதற்கான கோரிக்கையை ஏற்க அல்லது மறுக்க உங்களுக்கு மூன்று நாட்கள் இருக்கும்.


iPhone-ல் வாட்ஸ்அப் குழுக்களில் யாரோ ஒருவர் உங்களைச் சேர்ப்பதை எப்படி தடுப்பது?

நீங்கள் iPhone-ல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தினால், அனுமதியின்றி உங்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ப்பதைத் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

  1. உங்கள் iPhone-ல் கீழ் பட்டியில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும், Settings-ஐத் தட்டவும்.
  2. பிறகு, Account > Privacy > Groups-ஐத் தட்டவும்.
  3. அடுத்த திரையில், கொடுக்கப்பட்ட மூன்று ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் - Everyone, My Contacts மற்றும் My Contacts Except. இங்கேயும் நீங்கள் தொடர்புகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கீழ்-வலதுபுறத்தில் உள்ள Select All பொத்தானைத் தட்டுவதன் மூலம் அனைத்து தொடர்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் பயிற்சிகளுக்கு எங்களின் How to பகுதியைப் பார்வையிடவும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »