Instagram-லிருந்து போட்டோ, வீடியோக்களை எப்படி டவுன்லோடு செய்வது?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 13 ஏப்ரல் 2020 11:52 IST
ஹைலைட்ஸ்
  • நீங்கள் இன்ஸ்டாகிராம் போட்டோ, வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்
  • இன்ஸ்டாகிராம் வீடியோக்களைப் பதிவிறக்க மூன்றாம் தரப்பு செயலிகள் தேவையில்லை
  • போன்கள் மற்றும் கணினிகளுக்கு இந்த செயல்முறை அப்படியே உள்ளது

ஆம், நீங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றே, இன்ஸ்டாகிராமும் மிகவும் பிரபலமான சமூக வலைதள செயலிகளில் ஒன்றாகும். Instagram-ல் பதிவிடும், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி தெரிந்துகொள்ளுங்கள். 


இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், புகைப்படங்களை எப்படி டவுன்லோடு செய்வது? 

இந்த வழிமுறை public accounts-ல் இருந்து இன்ஸ்டாம்கிராம் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிறக்கம் செய்ய மட்டுமே அனுமதிக்கிறது. 

கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் இன்ஸ்டாகிராம்-ஐத் திறந்து, டவுன்லோடு செய்ய விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்வுசெய்யவும். இப்போது பதிவின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானைத் தட்டவும்> Copy Link தட்டவும்.
  2. அடுத்து, உங்கள் போன் அல்லது கணினியில் எந்த browser-ஐயும் திறந்து www.downloadgram.com-ஐத் திறக்கவும்.
  3. வலைத்தளத்தில், Copy செய்த Link-ஐ search bar-ல் paste செய்வும், பிறகு டவுன்லோடை அழுத்தவும்.
  4. ஒரு டவுன்லோடு படம் / வீடியோ பொத்தான், இப்போது டவுன்போடு பொத்தானுக்கு கீழே தோன்றும். உங்கள் போன் அல்லது கணினியில் file-ஐ save செய்ய அதை அழுத்தவும்.
  5. மாற்றாக, www.instadownloader.co அல்லது www.gramsave.com ஆகிய இரண்டு வலைத்தளங்களிலும் பார்வையிடலாம்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை எப்படி டவுன்லோடு செய்வது? 

கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்: 

  1. உங்கள் போன் அல்லது கணினியில் www.storiesig.com-ஐத் திறந்து, நீங்கள் ஸ்டோரியை பதிவிறக்கம் செய்ய விரும்பும் இடத்திலிருந்து profile-ன் இன்ஸ்டாகிராம் username-ஐ enter செய்யவும்.
  2. search bar-ன் கீழே செயலில் உள்ள ஸ்டோரியின் பட்டியலை இப்போது காண்பீர்கள். save செய்த பழைய ஸ்டோரியை பதிவிறக்க விரும்பினால் கீழே scroll செய்யலாம்.
  3. இப்போது, ​​Stories > scroll down என்பதைக் கிளிக் செய்து, பதிவிறக்க விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்> பதிவிறக்கவும்.
  4. உங்கள் டவுன்லோடு முடிந்ததும், உங்கள் file தானாகவே சாதனத்தில் save ஆகும்.

இந்த எளிய வழிமுறைகளை பயன்படுத்தி, இப்போது இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், ஸ்டோரிகள் மற்றும் புகைப்படங்களை எளிமையாக பதிவிறக்கலாம். 

மேலும் பயிற்சிகளுக்கு how to பிரிவை பார்வையிடலாம். 


Mi TV 4X vs Vu Cinema TV: Which is the best budget TV in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Instagram, Social, How to, Android, iOS, macOS, Windows
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OPPO Find X9, Dimensity 9500 உடன் கூடிய Find X9 Pro அறிவிக்கப்பட்டது: விலை, விவரக்குறிப்புகள்
  2. Realme C85 Pro Geekbench Listing! 7000mAh பேட்டரி, Snapdragon 685: விலை செக் பண்ணுங்க!
  3. S26 சீரிஸ்ல Samsung-ன் மாஸ்டர் பிளான்! Bluetooth 6.1 சப்போர்ட்டுடன் Exynos S6568 சிப்!
  4. iQOO Neo 11 வருகிறான்! 7500mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே-னு வெறித்தனம் அக்டோபர் 30 லான்ச்
  5. Redmi Turbo 5-ன் புதிய லீக்! 1.5K டிஸ்பிளே, IP68 ரேட்டிங்: Poco X8 Pro-வா இந்தியாவுக்கு வரும்?
  6. DSLR-க்கு டஃப் கொடுக்க Vivo ரெடி! Zeiss-உடன் கைகோத்து Vivo X300 சீரிஸ் இந்தியாவிற்கு வருது
  7. OnePlus-ன் கேமிங் ராட்சசன் வந்துட்டான்! 7,800mAh பேட்டரி பவர்! 165Hz டிஸ்ப்ளே! OnePlus Ace 6-ன் அம்சங்கள் என்னென்ன?
  8. ஒன்பிளஸ் 15 வந்துவிட்டது! பேட்டரி வேற லெவல்! 7300mAh பேட்டரி பவர் விலையும், ஸ்பெக்ஸ்ஸும் பார்க்கலாமா?
  9. கேமராவில் புரட்சி! 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் உடன் Xiaomi 17 Ultra வரப்போகுது
  10. அல்ட்ரா-ஸ்லிம் செக்மென்ட்டில் Motorola-வின் புதிய ஆட்டம்! Moto X70 Air இந்திய லான்ச் டீஸ் ஆகி இருக்கு! விலை ₹30,000-க்குள் இருக்குமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.