Photo Credit: டிவிட்டர்/சியோமி இந்தியா
சியோமி நிறுவனம் சார்பாக டிஸ்சர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
சியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்கு முன்னதாக இன்று வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில் ‘நெவர் டேக் யுவர் ஐஸ் ஆஃப்' என்ற பன்ச் லையனுடன் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பின் படி வெளியாகிவுள்ளது செக்கியூரிட்டி கேமராவாக இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. ஏற்கனவே ரூபாய் 2,699 க்கு எம்ஐ ஹோம் செக்கியூரிட்டி கேமராக்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பின் வாயிலாக இந்த கேமராக்கள் அடுத்தக்கட்ட அப்டேட் பெரும் என நம்பப்படுகிறது.
சியோமி நிறுவனம் சார்பாக டீஸர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அதிகாரரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆனால் இந்த செய்தி உண்மை என்றால் அது எம்ஐ நிறுவனத்தின் வீடுகளை பாதுகாக்கும் கேமராவாக தான் இருக்கும். அதன் மாடல் என் SXJ02ZM ஆக உள்ள நிலையில் இந்தியாவில் அதன் விலை ரூபாய் 1,400 ஆக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
1080p வீடியோ கிளாரிட்டி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 130 டிகிரி பரந்த கோணம் கொண்ட லென்ஸை பயன்படுத்திகிறது. செயற்கை நுண்ணறிவு, இன்ஃப்ரா ரெட் இரவு பார்வை, இரண்டு வழி ஆடியோ பதிவு மற்றும் பாதுகாப்பான சேமிப்பு வசதி போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் கசிந்துள்ள சில தகவல்கள் படி எம் ஸ்பீயர் கேமரா எனப்படும் (360 டிகிரி) பாதுகாப்பு கேமராவும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எதுவாக இருந்தாலும் பிப்ரவரி 13 ஆம் தேதி இதற்கு பதில் கிடைத்துவிடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.