தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் தொலைக்காட்சிகள் தங்களது திரை அமைப்பில் கவனத்தை செலுத்துகின்றன. ஆனால், அந்தத் தொலைக்காட்சியின் ஆடியோ தரத்தில் கவனம் செலுத்துவதில்லை.
இதனால் வாடிக்கையாளர்கள் ஸ்பீக்கர்கள் மற்றும் சவுண்டுபார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங், தொலைக்காட்சிகளுக்கான பிரத்யேக Q வரிசை சவுண்டுபார்களை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த Q வரிசை சவுண்டுபார்களில் HW-Q70R மற்றும் HW-Q60R என இரண்டு புதிய சவுண்டுபார் தயாரிப்புகள் அறிமுகமாகியுள்ளன. இந்த பிரமாண்ட சவுண்டுபார்கள் அக்குஸ்டிக் பீம் டெக்னாலஜி மற்றும் அடேப்டிவ் சவுண்டு தொழில்நுட்பங்களுடன் வெளியாக உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு ஹார்மான் கார்டோன் என்னும் துணை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் இந்த சவுண்டுபாரில் இடம் பெற்றுள்ள அடேப்டிவ் சவுண்டு தொழில்நுட்பம் இரண்டு சவுண்டுபார்களையும் இணைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வீடியோவுடன் ஆடியோவை இணைக்கிறது.
இந்த சவுண்டுபாரை சாம்சங் QLED தொலைக்காட்சிகளுடன் பயன்படுத்தும்போது, தொலைக்ககாட்சியில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு முறையைப் பயன்படுத்தி வீடியோக்களின் சவுண்டை நமது விருப்பதிற்கேற்ப சீரமைக்கிறது.
மேலும் இந்த Q வரிசை சவுண்டுபார்களான HW-Q70R மற்றும் HW-Q60R-களில் இடம் பெற்றுள்ள அக்குஸ்டிக் பீம் டெக்னாலஜி ஸ்பீக்கரில் இருந்து வெளியாகும் சவுண்டின் பிட்சை தெளிவு செய்கிறது. இந்த சவுணடுபாரில் புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் டால்ஃபி அட்மோஸ் மற்றும் டிடீஎஸ் இமெர்சிவ் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.
59mm உயரமுள்ள இந்த சவுண்டுபார் தொலைக்காட்சிக்கு முன்னர் பொருத்தினால் வசதியாக இருக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு இந்தியாவில் வெளியாகும் தேதி மற்றும் விலை பற்றிய தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்