Redmi TV 3,799 யுவான்கள் (சுமார் 38,000 ரூபாய்) என்ற விலையில் சீனாவில் விற்பனையாகவுள்ளது.
Dolby Audio மற்றும் DTS HD போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த Redmi TV கொண்டுள்ளது.
வெளியானது Redmi TV. வியாழக்கிழமை சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில், சியோமி நிறுவனம் முதல் ரெட்மி டிவியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி தொலைக்காட்சி, 'Redmi TV 70-inch' என்றே பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிவி 4K தரம், HDR வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது. ரெட்மி டிவி மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட RedmiBook 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டிவி செப்டம்பர் 3ல் விற்பனைக்கு வரும் என சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிவி 3,799 யுவான்கள் (சுமார் 38,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. தற்போது சினாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, சர்வதேச அளவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், சியோமி நிறுவனம் Mi TV போன்ற சாதனங்களில் இந்தியா பொன்ற நாடுகளில் விரைவாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்த முதல் ரெட்மி டிவியின் சீனாவை தாண்டிய அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.
முன்பு கூறியதுபோல, ரெட்மி டிவி 70-இன்ச் 4K திரை, HDR வசதி ஆகியவற்றுடன் சுவற்றில் மாட்டுவது அல்லது டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுக்கு ஏதுவான பேசல்களுடனே அறிமுகமாகியுள்ளது. இந்த ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டே இயங்குகிறது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பை கொண்ட இந்த ரெட்மி டிவி குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் SoC (64-bit Amlogic SoC) ப்ராசஸரை கொண்டே இயங்குகிறது. Dolby Audio மற்றும் DTS HD போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.
இணைப்பு வசதிகளை பொருத்தவரை வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு USB போர்ட்கள், மூன்று HDMI போர்ட்கள், AV input, என பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் அளிக்கிறது சியோமி நிறுவனம்.
முன்னதாக, சியோமி நிறுவனம் Mi TV வரிசையில் 22 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket