இந்தியாவில் பட்ஜெட் தொலைக்காட்சிகளின் தயாரிப்பு மற்றும் விற்பனை தொட்ர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனமான ஜேவிசி (JVC) இந்தியாவில் உள்ள ஓஇஎம் வீயிரா குழுமத்துடன் (OEM Viera) இணைந்து பெரிய திரைகொண்ட ஒரு பிரமாண்ட தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.
JVC 55N7105C எனப்படும் இந்த 4கே ஸ்மார்ட் எல்இடி தொலைக்காட்சி தயாரிப்பு ரூ.38,999க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. ஃபிளாப்கார்ட் தளத்தில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி ரூ.39,999க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை பெற்றுள்ளது.
3840x2160 பிக்சல் திரை, 60Hz ஸ்டான்டர்டு ரிஃப்ரஷ் ரேட், முகப்பில் 50W சவுண்ட் அவுட்புட் பெருவதற்கான ஸ்பீக்கர்ஸ் போன்ற பல சிறப்பு அமைப்புகளை இந்த தொலைகாட்சி பெற்றுள்ளது. மேலும் இந்த தொலைக்காட்சியில் 2ஜிபி ரேம், 16ஜிபி சேமிப்பு அமைப்பு மற்றும் ஒரு குவாட்-கோர் பிராசஸ்சர் இடம்பெற்றுள்ளது. சியுஐ மற்றும் சென்ஸ்சிவால் எனப்படும் இரண்டு இடைமுகங்களை பெற்றுள்ள இந்த தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார், யூடியுப் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற செயலிகளுடன் வெளியாகிறது.
மூன்று HDMI போர்ட்கள் மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்டுகளை பெற்றுள்ள இந்த தொலைகாட்சி ஹெச்டிஆர் அமைப்பையும் பெற்றுள்ளது. மேலும் இந்த தொலைக்காட்சியில் வயர்ட் மற்றும் வயர்லெஸ் இணைய சேவைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொலைக்காட்சிக்கு ஒரு சாதாரண ரிமோர்ட் கன்ட்ரோல் மற்றும் ஒரு QWERTY வகை ஸ்மார்ட் ரிமொர்ட்டும் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் ரூ.16,999 முதல் தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்துவந்த ஜேவிசி நிறுவனம் தனது அதிகபட்ச தயாரிப்பு விலையில் இந்த JVC 55N7105C மாடல் தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்