தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்கள் மட்டும் உறவினர்களைப் பார்த்துப் பேச இன்றைய நாளில் நாம் பெரும்பாலும் வீடியோ காலிங் ஆப்களையே பயன்படுத்துகிறோம். இப்படி வீடியோ காலிங் செய்யும் ஆப்களில் மிகவும் முக்கிய செயலி கூகுள் டூயோ. இந்நிலையில், டூயோ தனது சேவையை தற்போது போன்களுக்கு மட்டுமில்லாமல் இணையதளத்தை பயன்படுத்துபவர்களும் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த புதிய அப்டேட்டின் மூலம் இன்னும் புதிய வாடிக்கையாளர்களை சென்றடையும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது. கூகுள் தயாரிப்பில் இதே வசதிகளுடன் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது அலோ ஆப்.
இதைப் பயன்படுத்த இணையத்தில் கூகுள் டூயோ என டைப் செய்தாலே போதும், அப்போது வெளியாகும் லிங்கை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வீடியோ அல்லது வாய்ஸ் காலிங்-ஐ செய்ய முடியும். குரோம், ஃபயர்பாக்ஸ் மற்றும் சஃபாரி போன்ற தேடுதல் தளங்களில் (search engines) கூகுள் டூயோவை பயன்படுத்த முடியும். அதே நேரத்தில், மைக்ரோ சாஃப்ட் தேடுதல் தளத்தில் டூயோவை பயன்படுத்த இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் மூலம், கூகுள் டூயோ செயலியை போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாதவர்கள் அதிகம் பயனடைவார்கள் எனப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்