முன்னதாகவே ஈராக், நேபால், இந்திய மாநிலமான குஜராத், இந்தோனேசிய மாகாணமான ஆச்சே ஆகிய இடங்களில் இந்த பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தது.
தற்போது, பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்துள்ள நாடு, ஜோர்டன். ஜோர்டன் அரசு கடந்த சனிக்கிழமையன்று இந்த தடையை அறிவித்தது. இந்த விளையாட்டின் அந்த நாட்டு குடிமக்களுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளின் காரணமாக இந்த முடிவை ஜோர்டன் அரசு முன்னெடுத்துள்ளது.
இந்த ஆன்லைன் ஆக்சன் கேமான 'பப்ஜி' தன் விளையாட்டு முறையினால், மொபைல் விளையாட்டில் உலகின் நம்பர் 1 விளையாட்டாக உருவெடுத்துள்ளது. ஆனால், இதன் ஆக்ரோசமான விளையாட்டு முறையினால் நாளுக்கு நாள் பல இறப்புகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. இந்த விளையாட்டின் ஆக்ரோசம் காரணமாக, இதனை விளையாடுபவர்களுக்கு மாரடைப்பு வரை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் 16-வயது இளைஞர் பப்ஜி விளையாடி மாரடைப்பால் உயிரிழக்கிறார்.
இம்மாதிரியான் விளைவுகளால், பப்ஜி விளையாட்டை ஜோர்டன் தடை செய்துள்ளது.
இதுகுறித்து ஜோர்டனின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்,"இந்த பப்ஜி விளையாட்டு, தன் பயன்பாட்டாளர்கள்மீது எதிர்மறை விளைவுகளை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளது.
முன்னதாகவே ஈராக், நேபால், இந்திய மாநிலமான குஜராத், இந்தோனேசிய மாகாணமான ஆச்சே ஆகிய இடங்களில் இந்த பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தது.
பப்ஜி விளையாட்டு, ஜோர்டனில் ஒரு பிரபலமான விளையாட்டு. இதன் எதிர்மறை விளைவுகள் காரணமாக, அங்குள்ள நிறுவனங்கள் தன் தொழிலாளர்களை இந்த விளையாட்டை விளையாடக்கூடாது என எச்சரித்துள்ளது.
அந்த நாட்டு உளவியலாளர்கள் இந்த விளையாட்டு இளைஞர்களிடையே வன்முறையை தூண்டுகிறது எனக் கூறுகிறார்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OnePlus 15 Launching Today: Know Price in India, Features, Specifications and More