பப்ஜி தடை: குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில், பப்ஜி விளையாடியதற்காக போலீசார் 10 நபர்களை கைது செய்துள்ளனர்.
பப்ஜி விளையாடியதற்காக போலீசார் 10 நபர்களை கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில், பப்ஜி விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி விளையாடிய 10 நபர்களை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநில அரசு விதித்தத் தடை உத்தரவை மீறி பப்ஜி விளையாட்டிற்காக கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவேயாகும். மேலும் ராஜ்கோட் காவல்துறையினர் இந்த கேமை விளையாடிவர்களிடம் இருந்து விசாரணைக்காக தற்போது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
'ரோந்து பணியின் போது காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தாமோதர் காலாவாட், சாலை அருகே இருக்கும் தேநீர் விடுதி அருகில் பப்ஜி கேமை விளையாடிக் கொண்டிருந்த 6 நபர்களை கைது செய்ததாக' ராஜ்காட் தாலுகா காவல்துறை ஆய்வாளர் விஎஸ் வான்சாரா இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரிடம் கூறியுள்ளார்.
காலாவாட், 6 பேரிடமிருந்து ஸ்மார்ட்போன்களை கைப்பற்றிய பின்னர் சோதனை செய்து, இது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளார். பின்னர் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டினால் பிள்ளைகளுக்குப் படிப்பின் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகும், பிள்ளைகள் மத்தியில் தகாத வார்த்தைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் பரவுவதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து மோமோ சேலஞ்ச் மற்றும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய குஜராத் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி, மோமோ சேலஞ்ச் மற்றும் பப்ஜி விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பதாக அரசு சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இது கடுமையான உத்தரவாக இருப்பதாகவும் பல ஆராயிச்சிகளின் முடிவில் இந்த விளையாட்டாலும் பிள்ளைகளுக்கு ஏற்படும் கோபத்திற்கும் சம்பந்தமில்லை என தெரியவந்தது எனவும் ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பப்ஜி விளையாட்டும் அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பெற்றோர்களுடன் சமீபத்தில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, 'தடையை விட அன்பாக அறிவுரை கூற வேண்டும்' எனத் தெரிவித்தார். தொழில்நுட்பம் நமது வாழ்கையை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும் எனவும் அது நம்மை அழித்துவிடக்கூடாது எனவும் அவர் கூறினார்.
மேலும் அவர், 'பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சரியாக வழிகாட்டினால் பிள்ளைகள் தானகவே ப்ளே ஸ்டேஷனை விட்டுவிட்டு விளையாட்டு மைதானத்திற்கு வந்துவடுவார்கள்' எனக் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28