பொழுதுபோக்கு சந்தையை அலறவிடும் Vodafone Idea அறிவிப்பு!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2024 15:05 IST
ஹைலைட்ஸ்
  • 400க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம்
  • 13க்கும் மேற்பட்ட பிரபலமான ஓடிடி தளங்களும் இலவசம்
  • புதுப்பித்தலின் விளைவாக Vi App 450 க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களை வழ

Photo Credit: Vi

இந்தியாவின் 3வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான Vodafone Idea நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய பொழுதுபோக்கு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Vi Movies and TV என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஆப் ஒரே இடத்தில் OTT மற்றும் லைவ் டிவி சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவை வழங்கி, கூடுதல் வருமானத்தைப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

Vi Movies and TV ஆப் மூலம் 17க்கும் மேற்பட்ட பிரபலமான ஓடிடி தளங்களையும், 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் Vodafone Idea  வாடிக்கையாளர்கள் பெற முடியும். பல ஓடிடி தளங்களுக்காக தனித்தனியே கட்டணம் செலுத்துவதை விட, ஒரே கட்டணத்தில் பலதரப்பட்ட பொழுதுபோக்கு சேவைகளைப் பெறும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி Live, ZEE5 போன்ற பிராந்திய OTT தளங்கள் உட்பட 17க்கும் மேற்பட்ட OTT சந்தா இலவசம். மேலும் மனோரமா மேக்ஸ் (மலையாளம்), நம்ம ஃபிலிக்ஸ் (கன்னடம்) மற்றும் ப்ளேஃப்ளிக்ஸ் கொரிய ஷோக்கள் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது.  ஆஜ் தக், ஏபிபி நியூஸ், ரிபப்ளிக் போன்ற 350 நேரடி டிவி சேனல்களுக்கும், யூரோஸ்போர்ட், டிஎல்சி போன்ற பிரீமியம் லைஃப்ஸ்டைல் சேனல்களுக்கும் இதில் வருகிறது. 

ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் இணையதளம் வழியாகவும் Vi Movies and TV ஆப்பை அணுகலாம். மேலும், ஒரே நேரத்தில் இரண்டு கருவிகளில் இருந்து ஓடிடி தளங்களில் இந்த ஆப் மூலம் படம் பார்க்க முடியும். பல்வேறு ஓடிடி தளங்களுக்காக தனித்தனியே கட்டணம் செலுத்துவதைத் தவிர்த்து, குறைந்த விலையில் ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெற  Vi Movies and TV சிறந்த தேர்வாக இருக்கும் என  Vodafone Idea நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vi Movies & TV Rs 154 Plan Details

இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல 400+ லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த சலுகைகளை மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Vi Movies & TV Rs 202 Plan Details

இந்த திட்டத்தில் 13+ ஓடிடி ஆப்கள் மற்றும் 400+ டிவி சேனல்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல 5 ஜிபி டேட்டா சலுகையையும் பெற்று கொள்ளலாம். டிவி மற்றும் மொபைலில் இந்த சலுகைகளை பெற்று கொள்ள முடியும்.

Advertisement

Vi Movies & TV Rs 248 Plan Details

இந்த திட்டத்தில் 6 ஜிபி டேட்டா வருகிறது. 400+ டிவி சேனல்கள் கிடைக்கிறது. 17 ஓடிடிகளை பயன்படுத்தலாம். ஓடிடி சலுகைகள் மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி கூடுதலாக வருகிறது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vi Movies, Vodafone Idea, ZEE5

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வெயில் காலத்துக்கு இப்போவே ரெடி ஆகணுமா? அமேசான் சேலில் ₹26,440 முதல் பிராண்டட் ஏசிகள்! மிஸ் பண்ணக்கூடாத டாப் டீல்கள் இதோ
  2. பட்ஜெட் விலையில் ஒரு பக்கா வாஷிங் மெஷின்! அமேசான் சேலில் ₹13,490 முதல் டாப் லோடிங் மாடல்கள்! வங்கி சலுகைகளுடன் அதிரடி
  3. வீட்டுக்கும் ஆபிஸுக்கும் ஏத்த பட்ஜெட் பிரிண்டர்கள்! அமேசான் ரிபப்ளிக் டே சேலில் HP, Canon, Epson மீது அதிரடி தள்ளுபடி
  4. சாம்சங், ஆப்பிளுக்கே சவால்! ஹானரின் 'போர்ஷே' எடிஷன் - ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் மிரட்டலான லான்ச்
  5. இவ்வளவு மெல்லிய போன்ல இவ்வளவு பெரிய பேட்டரியா? ஹானரின் மேஜிக் ஆரம்பம்! HONOR Magic8 Pro Air வந்தாச்சு
  6. விலை கிடுகிடுவென குறைந்தது! அமேசான் சேலில் ₹11,989 முதல் தரமான ரெப்ரிஜிரேட்டர்கள்! டாப் 10 டீல்கள் இதோ
  7. மாணவர்களுக்கும் ஆபிஸ் போறவங்களுக்கும் கொண்டாட்டம்! அமேசான் சேலில் ₹12,499 முதல் பிராண்டட் டேப்லெட்டுகள்! டாப் டீல்கள் இதோ
  8. "லேக்" இல்லாம கேம் விளையாடணுமா? இதோ அமேசான் சேலில் ₹50,000 பட்ஜெட்டில் இருந்து மிரட்டலான கேமிங் லேப்டாப் டீல்கள்
  9. ஸ்மார்ட்போன் உலகத்தையே மிரள வச்ச Redmi Turbo 5 Max! 3.3 மில்லியன் AnTuTu ஸ்கோர்.. 9,000mAh பேட்டரி! முழு விவரம் இதோ
  10. ஸ்டைலான டிசைன்.. மிரட்டலான பேட்டரி! ஜனவரி 23 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய Moto Watch
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.