மாதம் ரூ.119 செலுத்தி விளம்பரமில்லா பாடல்களை ஸ்பாட்டிபையில் கேட்க முடிகிறது!
இலவசமாக கேட்கும் வாடிக்கையாளர்கள், ப்ரீமியம் செலுத்தி கேட்பவர்கள் என வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது.
உலகமெங்கும் பிரபலமான ஸ்பாடிப்பை என்னும் கட்டணம் செலுத்திய பாடல்கள் கேட்கும் செயலி, இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமானது.
வெளியாகி இந்த சிறிய காலத்திலேயே சுமார் 1 மில்லியன் தனிப்பட்ட வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இலவசமாக கேட்கும் வாடிக்கையாளர்கள், ப்ரீமியம் செலுத்தி கேட்பவர்கள் என வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஜியோ சாவன் மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற பல முக்கிய நிறுவனங்கள் இந்திய மார்கெட்டில் முன்னணி இடங்களை வகித்து வருகின்ற நிலையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம், தனது செயலியை வெளியிட்ட சில நாட்களிலேயே வாடிக்கையாளர்களை தன்வசம் திருப்பியுள்ளது.
1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் சுமார் 400 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் உள்ளதாகவும் இது ஸ்பாடிப்பை நிறுவனத்திற்கு நல்ல தளமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. மேலும் வெளியாகியுள்ள தகவல்படி, இந்தியாவில் மாதம் சுமார் 80 மில்லியன் பயனர்களை ஈர்க்க, ஸ்பாட்டிபை இலக்கு வைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவில் இயங்கி வரும் அமேசான் ப்ரைம் மியூசிக், கூகுள் ப்ளே மியூசிக் மற்றும் சியோமியின் ஹங்காமா போன்ற நிறுவனங்கள் சரிவைச் சந்திக்க வாய்புள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter